BS-VI என்றால் என்ன... கட்டாயம் ஏன்... வாகனங்கள் வாங்க இது தகுந்த நேரமா...?

இந்த BS-4 ரக வாகனங்களைவிட BS-6 ரக வாகனங்கள் குறைவான மாசுபாடை ஏற்படுத்தும்.

BS-VI என்றால் என்ன... கட்டாயம் ஏன்... வாகனங்கள் வாங்க இது தகுந்த நேரமா...?
இந்த BS-4 ரக வாகனங்களைவிட BS-6 ரக வாகனங்கள் குறைவான மாசுபாடை ஏற்படுத்தும்.
  • News18
  • Last Updated: March 9, 2020, 5:34 PM IST
  • Share this:
ஏப்ரல் 1, 2020 முதல் BS-VI வாகன மாசுக்கட்டுப்பாடு கொள்கையை கட்டாயச் சட்டமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் BS-IV வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது.

BS-VI அல்லது BS-6 என்றால் என்ன? BS என்றால் ஆங்கிலத்தில் பாரத் ஸ்டேஜ் எனப் பொருள். இந்தியாவிற்கு ஏற்ப இந்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வாகன மாசுக்கட்டுப்பாடு கொள்கை. 6 என்பது அச்சட்டத்தின் வீரியத்தை உணர்த்துகிறது. இதனால் வரையில் நாம் BS-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வந்தோம்.

இந்த BS-4 ரக வாகனங்களைவிட BS-6 ரக வாகனங்கள் குறைவான மாசுபாடை ஏற்படுத்தும். BS-4 வாகனத்திலிருந்து வெளியேறும் புகையில் உள்ள சல்பர் என்னும் அமிலத்தன்மை குறைவு. மேலும், வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் BS-6 வாகனத்தில் 80 சதவிகிதம் குறைவு.


இதனாலே, BS-V என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக BS-VI வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. BS-VI மிகவும் விலை அதிகமானது என்றால் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதனாலே மக்கள் அதிகப்படியாக BS-VI ரக வாகனங்களை வாங்குங்கள் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள 8 லட்சத்துக்கும் அதிகமான BS-4 ரக வாகனங்களை விற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். ஆக, புதிய BS-VI ரக இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க: முற்றிலும் BS-VI எரிபொருள்... மார்ச் 1 முதல் அப்டேட் ஆன பாரத் பெட்ரோலியம்!


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading