Los Angeles: அமெரிக்காவில் புறப்பட்ட விமானத்தில் இருந்து திடீரென குதித்த பயணி!

மாதிரி படம்

அமெரிக்காவில் விமானத்தில் பயணிகளின் அத்துமீறல் மற்றும் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

  • Share this:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த பயணி ஒருவர், திடீரென அவசரகால வாசல் வழியாக குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்கைவெஸ்டால் இயக்கப்படும் யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானம் 5365 லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சால்ட் லேக் நகருக்கு புறப்பட்டது. இரவு 7 மணியளவில் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து, விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும், ஓடுபாதையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, உள்ளே இருந்த ஒரு பயணி திடீரென விமானத்தின் அவசர கால வாசல் கதவை திறந்து அதன் வழியாக வெளியே குதித்துள்ளார். இதனைக் கவனித்த பைலட், உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழே குதித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு விமான நிலைய அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதனிடையே சால்ட் லேக் சிட்டிக்குச் சென்ற இரட்டை எஞ்சின் எம்ப்ரேயர் 175, அதன் வாயிலுக்குத் திரும்பியது என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது. சில மணி நேரம் கழித்து விமானத்தில் இருந்த வேறு யாரும் காயமடைந்து இருக்கிறார்களா என எஃப்.பி.ஐ விசாரித்தது.
அந்த பயணி அவசரகால கதவு வழியாக விமானத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிகள் அறைக்குள் (Cocokpit) நுழைய முற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாகவும், கீழே குதித்த பயணியின் நோக்கம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விமானத்தில் இருந்த பயணிகளிடம் நடத்திய விசாரணையில், விமானம் பறக்க, ஓடுதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் தன் இருக்கையில் இருந்து எழுந்ததாகவும், அவர் விமானிகள் விமானத்தை இயக்கும் காக்பிட் அறையைத் திறக்க முயன்றதாகவும் தகவல் அளித்துள்ளனர். அந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எதற்காக இப்படி ஒரு அசம்பாவிதத்தில் ஈடுபட்டார் என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.

Also read... முன்னாள் காதலனுக்கு கிஃப்ட்டாக கொடுத்த காஸ்டலி பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பெண்... ஷாக் வீடியோ!

அமெரிக்காவில் விமானத்தில் பயணிகளின் அத்துமீறல் மற்றும் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரு கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு ஓடுபாதையில் சென்று விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார். போலீசார் உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. டிரைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் விமானத்தில், விமான நிலையங்களில் பயணிகளின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 3000 சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: