வாகன பதிவு எண்ணில் National Permitக்கு புதிதாக BH என்ற தேசிய குறீயீடு அறிமுகம் - யாரெல்லாம் பதிவு செய்ய முடியும்?

வாகனங்கள்

வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி இடம்பெயர்வோரின் வசதிக்காக வாகனங்கள் பதிவுக்கான பாரத் சீரீஸ் வகை குறியீடு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த மாதம் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது.

 • Share this:
  ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு இடம்பெயர்வோர், தங்களது வாகனங்களை இடம்பெயரும் மாநிலத்தில் ஓராண்டு வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குள் பதிவுசெய்த மாநிலத்தில், அந்தப் பதிவை நீக்க வேண்டும். மேலும், தடையில்லா சான்றிதழைப் பெற்று, புதிய மாநிலத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

  இதில், புதிய மாநிலத்தில் சாலை வரியை செலுத்துவதுடன், ஏற்கெனவே செலுத்திய வரியை பழைய மாநிலத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும்.

  இதில் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும் வகையில், வாகனப் பதிவுக்கு பாரத் சீரிஸ் என்ற புதிய முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது அடுத்த மாதம் 15-ம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

  இந்த புதிய வகை குறியீடு பெற்ற வாகனங்கள், எந்த மாநிலத்துக்கும் தடையில்லாமல் செல்ல முடியும். இந்த குறியீட்டைப் பெற பாதுகாப்புப் படையினர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளை வைத்துள்ள தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  புதிய வகை குறியீடானது பதிவுசெய்யும் ஆண்டு, BH என்ற வார்த்தை, நான்கு அடுக்கு வாகன பதிவு எண், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு ஆங்கில எழுத்துகள் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாரத் சீரிஸ் பதிவு எண் பெறும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு மோட்டார் வாகன வரி அல்லது அதற்கும் மேலான இரட்டை இலக்க ஆண்டுகளுக்கான வரி செலுத்த வேண்டும். பாரத் சீரிஸ் பதிவுபெறும் வாகனங்களுக்கான எண்கள், வலைதளம் மூலமாகவே உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: