சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தாத ஜீரோ மாசு வெளியீட்டு வாகனங்களை அறிமுகம் செய்வதில் ஐரோப்பிய நாடுகள் அதிவிரைவாக செயல்பட்டு வருகின்றன.
2040-க்குப் பின் பெட்ரோல், டீசல் கார்களுக்குத் தடை என முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது நல்ல நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென 2035-ம் ஆண்டுக்குப் பின் பெட்ரோல், டீசல் வாகனங்கள் இருக்கக்கூடாது என அறிவித்துள்ளது.
மேலும், 2050-ம் ஆண்டு முதல் Zero Emission கொள்கை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் பிரான்ஸ் நாடும் மாசுபாடைக் குறைக்க Zero Emission முறையைப் பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
காற்று மாசுபாடைக் குறைக்க உலக நாடுகள் இணைந்து முயற்சித்து செயல்பட வேண்டும் என சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க: நீண்ட தொய்வுக்குப் பின்னர் மிதமான வளர்ச்சியைப் பெற்ற மாருதி சுசூகி! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.