ஆட்குறைப்பு நடவடிக்கையில் உபெர்… 5,400 பேர் பணியிழக்கும் அபாயம்..!

ஆட்குறைப்பு நடவடிக்கையில் உபெர்… 5,400 பேர் பணியிழக்கும் அபாயம்..!

உபெர்

நஷ்டத்தை ஈடுகட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

 • Share this:

  வாடகைக்கார் நிறுவனமான உபெர் தனது 20 சதவிகித பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கும் முடிவில் உள்ளது.


  கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கு முறையைக் கடைபிடித்து வருகின்றன. இத்தகைய சூழலில் போக்குவரத்து சேவை துறை நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. நிறுவன நிலையை சீர் செய்ய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உபெர் தயாராகி உள்ளது.


  வரும் வாரங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக் குறித்தத் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என உபெர் தலைமை தொழில்நுட்பத் தலைவர் துவான் ஃபேம் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உள்ள 27 ஆயிரம் நிரந்திர ஊபர் பணியாளர்களில் 5,400 பேர் அடுத்தடுத்து வேலை இழக்க உள்ளனர்.


  சர்வதேச அளவில் தொடர்ந்து பங்குச்சந்தைகளில் உபெர் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2020-ம் ஆண்டுக்கான ஊபர் நிறுவன முதலீடான 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளதாம்.


  கொரோனா தாக்கத்துக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,100 பணியாளர்களை வேலையைவிட்டு உபெர் நீக்கியது குறிப்பிடத்தக்கது. நஷ்டத்தை ஈடுகட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

  மேலும் பார்க்க: RE தண்டர்பேர்டு பைக்குக்கு மாற்றாக மீட்டியார் 350... கசிந்த விலை நிலவரம்..!
  Published by:Rahini M
  First published: