• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Tyre Safety: லாங் டிரிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? டயரில் இதையெல்லாம் செக் பண்ணுங்க!

Tyre Safety: லாங் டிரிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? டயரில் இதையெல்லாம் செக் பண்ணுங்க!

Tyre Safety

Tyre Safety

நீங்கள் உபயோக்கிக்கும் டயரின் தரத்தை பார்க்க வேண்டும். ரப்பர்கள் நல்ல நிலையில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலால் வீட்டில் முடங்கியிருந்த மக்களுக்கு பயம், மனச்சோர்வு, பதட்டம் என நெகடிவ் எண்ணங்கள் அதிகளவில் சூழ்ந்திருந்தது. எப்போது லாக்டவுன் முடியும் என காத்திருந்த மக்களுக்கு இப்போது விமோசனம் கிடைத்திருக்கிறது என சொல்லலாம். தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால், கார் மற்றும் பைக்குகளில் உடனடியாக லாங் டூருக்கு பலரும் கிளம்பிவிட்டனர்.

ஆனால், இத்தகைய நீண்ட தூர பயணத்துக்கு திட்டமிடுவதற்கு முன்பு, உங்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதாவது, நீங்கள் செல்லும் வாகனம் கார் மற்றும் பைக் என எதுவாக இருந்தாலும், அவற்றின் தரம் குறித்து நீங்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த முன்னெச்சரிக்கை உங்கள் பயணத்தை மேலும் மிகழ்ச்சியாக்க உதவும். டயரில் நீங்கள் கவனிக்க வேண்டிய என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Also Read:  ரூ.500 செலவில் திருமணம்.. அசத்திய பெண் மாஜிஸ்திரேட் - ராணுவ மேஜர் ஜோடி

காற்று அழுத்தம் :

நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு உங்கள் கார் அல்லது பைக்கில் காற்றின் அழுத்தம் சரியாக இருக்கிறதா? என்பதை கட்டாயம் செக் செய்ய வேண்டும். ஏனென்றால் காற்றின் அழுத்தமானது டயரின் ஆயுள் மற்றும் வாகனத்தை வேகமாக செலுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. குறைவான காற்று இருந்தால் பயணம் இலகுவாக இருக்காது. போதுமான காற்றை டயர்களில் நிரப்பிக் கொள்ளுங்கள். காற்று கசிவு இருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்தி, சரிசெய்த பின்னர், பயணத்தை தொடங்குங்கள்.

டயரின் தரம் :

நீங்கள் உபயோக்கிக்கும் டயரின் தரத்தை பார்க்க வேண்டும். ரப்பர்கள் நல்ல நிலையில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை டயரின் தரம் குறைந்து, அதாவது ரப்பர் முழுமையாக தேய்ந்து காணப்பட்டால் அந்த டயரை உடனடியாக மாற்ற வேண்டும். TWI: Tread Wear Indicator – Bars”-ல் கொடுக்கப்பட்டுள்ள டயரின் தர அளவை பின்பற்றி உங்கள் டயரின் நிலையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். டயர் தரமாக இருந்தால், பயணத்தில் பயம் கொள்ளவேண்டிய அவசியமிருக்காது.

Also Read: அம்மாடியோவ்...! பழங்கால டெலிபோன் பூத்-க்கு இவ்வளவு விலையா?

டயரின் வயது :

டயருக்கு வயது இருக்கிறதா? என கேட்க வேண்டாம். அதனை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் என்ற அளவு, அனைத்து டயர்களுக்கும் இருக்கிறது. அதனை எப்படி கண்டுபிடிப்பது என உங்களுக்கு தெரியவில்லை என்றால், டயரின் பக்கவாட்டில் பாருங்கள். அங்கிருக்கும் எண்ணில், முதல் இரண்டு எண்கள் டயர் உற்பத்தி செய்யப்பட்ட வாரத்தையும், கடைசி இரண்டு எண்கள் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றன. 10 வயதுக்கு மேற்பட்டவையாக இருந்தால் நிச்சயம் மாற்றவிட வேண்டும். தரம் இன்னும் எஞ்சியிருந்தால் கூட மாற்றுவதற்கு தயங்கக்கூடாது.

காற்று லீக்கேஜ் :

டயர்களில் மெதுவான காற்று லீக்கேஜ் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். ரிம் பெண்ட், டயர் பஞ்சர் உள்ளிட்ட சேதங்களின் விளைவாக இருக்கலாம். பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக இதனை முழுமையாக சரிசெய்து கொள்ளுங்கள்.

Also Read:  கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

மேற்பார்வையிடுதல் :

வாகனத்தில் எந்தப் பிரச்சனை இல்லை என உங்களுக்கு தெரிந்திருந்தாலும், பயணத்தை தொடங்குவதற்கு முன்பு மேலோட்டமாக மீண்டும் ஒருமுறை வாகனத்தை பார்வையிடுங்கள். உடைப்பு, அடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஏதேனும் இருந்தால் அதனை சரிசெய்து கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எமர்ஜென்சி பொருட்கள் :

வண்டி பஞ்சர் கிட்டுகள், பேக்கப் டயர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: