• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • குவியும் ஆர்டர்களால் திணறும் மகேந்திரா - தார் SUV டெலிவரியில் சிக்கல்!

குவியும் ஆர்டர்களால் திணறும் மகேந்திரா - தார் SUV டெலிவரியில் சிக்கல்!

தார் SUV

தார் SUV

இந்த லேட்டஸ்ட் நியூ மஹிந்திரா தார் கார் இப்போது BS-VI உமிழ்வு நெறிமுறைக்கு இணக்கமானது மற்றும் 2.0 லிட்டர் mStallion TGDi பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • Share this:
மகேந்திரா தார் கார் புக்கிங் செய்தவர்களில் முக்கால்வாசி பேருக்கு, உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திரா நிறுவனத்தின் தார் எஸ்.யூ.வி மாடல் கார், வாடிக்கையாளர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான வரவேற்பு கிடைக்கும் என அந்த நிறுவனமே எதிர்பார்க்கவில்லை. புக்கிங்குகள் குவிந்ததால் மகிழ்ச்சியில் இருந்த மகேந்திரா நிறுவனம், புக்கிங் செய்தவர்களுக்கு கார்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், சந்தையில் கிடைத்த வரவேற்பை அந்த நிறுவனம் முறையாக கணிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆர்டருக்கு இணையாக உற்பத்தியை வேகப்படுத்தியிருந்தால் தேக்க நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவிக்கும் ஆட்டோமொபைல் துறையினர், புக்கிங் செய்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு கார்கள் டெலிவரி செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சர்வதே சந்தையில் ஏற்பட்டுள்ள பொருட்கள் தட்டுப்பாடும் கார்களை உரிய நேரத்தில் உற்பத்தி செய்து டெலிவரி செய்ய முடியாததற்கு மற்றொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மகேந்திராவின் தார் மாடல் எஸ்.யூ.வி கார், கொரோனாவுக்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ள இந்தக் கார், வாடிக்கையாளர்களின் மனதையும் கொள்ளையடித்துள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் சாலையில் பயணிக்கும்போது கிடைக்கும் கிளாசிக் லுக் ஆகியவை கார்களின் ஆர்டருக்கான காரணம் ஆகும். மஹிந்திராவின் இரண்டாம் தலைமுறை Thar SUV பெட்ரோல் எஞ்சின், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், நியூ ஸ்டைலிங் அப்டேட்ஸ் மற்றும் மிகவும் இணைக்கப்பட்ட மற்றும் அப்மார்க்கெட் கேபின் உள்ளிட்ட பல முக்கியமான அப்டேட்ஸ்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த லேட்டஸ்ட் நியூ மஹிந்திரா தார் கார் இப்போது BS-VI உமிழ்வு நெறிமுறைக்கு இணக்கமானது மற்றும் 2.0 லிட்டர் mStallion TGDi பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதே போல புக்கிங் எண்ணிக்கையை பொறுத்தவரை 50% புக்கிங் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியன்ட்களுக்காகவும், 25% புக்கிங்கள் பெட்ரோல் மாடலுக்காகவும் செய்யப்பட்டு வருகிறது என்று மஹிந்திரா நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

Also read... ப்ளூடூத் இணைப்புடன் கூடிய ப்ளெஷர்+ எக்ஸ்டெக் - ஹீரோ மோட்டோகார்ப் புத்தம் புதிய அறிமுகம்!

கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Thar AX வேரியன்ட்டின் விலை ரூ.9.8 லட்சம் மற்றும் சொகுசு அடிப்படையிலான Thar LX காரின் விலை ரூ.12.49 லட்சம் என்ற விலையில்அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Thar காரின் முதல் யூனிட் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டு, இந்த நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. புதிய 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் 150 பெட்ரோல் எஞ்சின் தார் வாகனமானது 300 Nm டார்க்கை கொண்டு 150 பிஎச்பி பவரை வழங்குகிறது மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் யூனிட் 300 Nm டார்க்கை கொண்டு,130 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, புதிய தார் 2020 காரானது சாஃப்ட்-டாப், ஹார்ட்-டாப் மற்றும் மாற்றத்தக்க ரூஃப் ஆப்ஷனுடன் வெளி வருகிறது. மேலும் ரெட் ரேஜ், மிஸ்டிக் காப்பர், கேலக்ஸி கிரே, நாபோலி பிளாக், ராக்கி பீஜ், அக்வா மரைன் உள்ளிட்ட 6 கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. இந்தக் கார் முறையாக டெலிவரி செய்யப்படாததால், அந்த நிறுவனத்தின் XUV700 மாடல் அறிமுகமாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: