முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / புதிய தயாரிப்புகள்... அதிநவீன வசதிகள்... இ-ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க TVS மோட்டாரின் சூப்பர் பிளான்..!

புதிய தயாரிப்புகள்... அதிநவீன வசதிகள்... இ-ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க TVS மோட்டாரின் சூப்பர் பிளான்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

டிசம்பர் காலாண்டு என்று கணக்கிட்டால் TVS நிறுவனம் மொத்தம் 29,000 யூனிட் iQube e-ஸ்கூட்டர்களை விற்றுள்ளது. முந்தைய மூன்று மாதங்களில் விற்ற 16,000 யூனிட்களில் இருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பான எண்ணிக்கை ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த ஆண்டில் TVS Motor Co. Ltd-ன் பங்குகள் சிறப்பான வகையில் கிட்டத்தட்ட 60% வரை உயர்ந்தன. செலவின அழுத்தங்களுக்கு மத்தியில் கடந்த சில காலாண்டுகளில் நிறுவனம் அதன் லாப வரம்புகளை தக்க வைத்து கொண்டுள்ளது.

இதனிடையே TVS Motor Co. நிறுவனம் தனது எலெக்ட்ரிக் டூ வீலர்களின் விற்பனையை வரும் மார்ச் மாதத்திற்குள் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் மூத்த அதிகாரியான கே.என். ராதாகிருஷ்ணன், அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்குள் எங்களது iQube லைனை விரிவுபடுத்தவும், 5kWh - 25kWh வரையிலான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.

ஒவ்வொரு காலாண்டிலும் எங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை இரட்டிப்பாக்கி வருகிறோம். அந்த வகையில் இந்த விற்பனை வேகத்தை நான்காவது காலாண்டிலும் தொடர்வோம். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 100,000 EV யூனிட்களை தாண்டி விற்பனை செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த டிசம்பரில் நிறுவனம் TVS iQube-ன் 11,000 யூனிட்களை விற்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தை பிடித்தது.

டிசம்பர் காலாண்டு என்று கணக்கிட்டால் TVS நிறுவனம் மொத்தம் 29,000 யூனிட் iQube e-ஸ்கூட்டர்களை விற்றுள்ளது. முந்தைய மூன்று மாதங்களில் விற்ற 16,000 யூனிட்களில் இருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பான எண்ணிக்கை ஆகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான அதிக தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் அதன் விநியோக சங்கிலி சீரமைத்து வருவதால் நிறுவனம் தற்போது 25,000 யூனிட் மாதாந்திர உற்பத்தி விகிதத்தை இலக்காக கொண்டுள்ளது. TVS மோட்டார் நிறுவனம் தனது iQube ஸ்கூட்டரின் மூன்று வேரியன்ட்ஸ்களை தவிர, அதன் எலெக்ட்ரிக் த்ரீ-வீலர் வாகனத்தையும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. iQube ஸ்கூட்டர் இப்போது TVS-ன் மொத்த ஸ்கூட்டர் விற்பனையில் 10%-ஐ கொண்டுள்ளது, இது தொழில்துறையின் சராசரியான 5% ஐ விட அதிகமாகும்.

Read More : ஆண்டுக்கு 14 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் இலக்கு.. பிரபல நிறுவனம் சொல்லும் அப்டேட்..!

தற்போதைய நிலவரப்படி சுமார் 25,000-க்கும் மேற்பட்ட iQube புக்கிங்ஸ்கள் உள்ளன. இதனடிப்படையில் விநியோகத்தை விட தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய விநியோகச் சங்கிலியை சீரமைத்து வருவதாக நிறுவனம் கூறி இருக்கிறது. TVS அதன் நெட்வொர்க் ஃபுட்பிரின்ட்டை 110 நகரங்களில் 200 டீலர்களாக அதிகரித்து வருகிறது. FAME-II மானியத்திற்குப் பிந்தைய சூழலில் செலவுகள் மற்றும் வாடிக்கையாளர் எலெக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுக்கொள்வது உள்ளிட்டவை குறித்து கூறி இருக்கும் TVS மோட்டார் நிறுவனம், iQube-க்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு மிக நன்றாக உள்ளது. ஆர்டர் எண்ணிக்கை தொடர்ந்து இது போலவே அதிகரித்தால் செல் காஸ்ட்ஸ், கெமிஸ்ட்ரிஸ் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும், மேலும் செலவின் மற்ற எல்லா அம்சங்களையும் மேம்படுத்த முடியும் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது.

இதற்கிடையே டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் எதிர்பார்த்ததை விட வலுவான நிதி செயல்திறனை பெற்றுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டில் ரூ.288 கோடியிலிருந்து 22.5% அதிகரித்து ரூ.352.75-ஆக உள்ளது. இந்த காலாண்டில் எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரித்ததால், வருவாய் கிட்டத்தட்ட 15% உயர்ந்து ரூ.6,545.42 கோடியாக உள்ளதாக நிறுவனம் கூறி இருக்கிறது.

First published:

Tags: Automobile, TVS