இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்

news18
Updated: May 26, 2018, 7:45 PM IST
இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்
டிவிஎஸ் எண்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர்.
news18
Updated: May 26, 2018, 7:45 PM IST
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  டிவிஎஸ் சார்பில் எண்டார்க் எஸ்எக்ஸ்ஆர் என்ற புதிய மாடல் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேசிங் விளையாட்டில்  பிரத்யேகமாக பயன்படுத்தப்படுவதற்காக இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர் ஏற்கெனவே உள்ள என்டார்க் 125 ஸ்கூட்டரை மாடலாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்தவரையிலும் என்டார்க் 125 ஸ்கூட்டர் போலவே காட்சியளிக்கிறது. மேலும், இந்த புதிய ஸ்கூட்டரில் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய என்டார்க் 125 மாடல் ஸ்கூட்டரில் 9 பிஹெச்பி பவர் வழங்கப்பட்டிருந்தது. தற்போது புதிய `என்டார்க் எஸ்எக்ஸ்ஆர்’ ஸ்கூட்டரில் இன்ஜின் திறன் 20 பிஹெச்பி பவராக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், இந்த புதிய  டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர்  120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றுள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டரை தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் புதிய ஸ்கூட்டரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அசிப் அலி மற்றும் ஷமிம் கான் ஓட்ட இருக்கின்றனர்.
First published: May 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...