ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

எலக்ட்ரிக் வாகனங்களில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

எலக்ட்ரிக் வாகனங்களில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

 டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார்

இந்தியாவில் மின் வாகன சந்தையை விரிவுபடுத்தவும், மின் வாகன தேவைகளை பூர்த்தி செய்யவும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலகம் முழுவதும் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை இப்போது தான் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களும் மாறி வரும் தேவைகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டு, சூழலுக்கு ஏற்ற மாதிரி மின் வாகன உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

அதன் அடிபப்டையில், இந்தியாவில் மின் வாகன சந்தையை விரிவுபடுத்தவும், மின் வாகன தேவைகளை பூர்த்தி செய்யவும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம். இந்தியாவில் இரண்டு சக்கர மட்டும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தமிழ்நாட்டில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த முதலீடு எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்கள், கிராமப்புறங்களிலும் முத்திரை பதித்துள்ள டிவிஎஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் வளரத் தொடங்கி இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது.

இதை மேலும் விரிவுபடுத்த இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. விரிவாக்கத்தை நிறைவேற்றும் விதமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 1200 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த முதலீடும் தமிழ்நாட்டிலேயே செய்ய இருப்பதாகவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த, நீடித்த மற்றும் சுற்று சூழல் பாதிப்பில்லாத பிராண்டாக டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு மாறி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நான்கு ஆண்டுகளில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனம் உற்பத்தி மற்றும் வாகனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய நோக்கங்களோடு நிறுவனம் செயல்படும்.

Also read... பழைய டீசல் கார்களையும் சாலைகளில் இயக்க புதிய திட்டத்தை முன்னெடுத்த டெல்லி அரசு!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களில் உற்பத்தி தொடக்கத்திலேயே அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. அதற்கான முன்பதிவும் நடைமுறையில் உள்ளது. மேலும் சில நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி செய்வதைத் தொடங்கியுள்ளன. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தமிழத்தை மையமாக வைத்து டிவிஎஸ் நிறுவனம் இயங்க இருப்பது மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியாகக் காணப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் மின் வாகனங்களுக்கான வளர்ச்சி மேம்படுவதோடு, வேலை வாய்ப்பும் அதிகரிக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TVS