டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ரேடியான் 110சிசி (Radeon 110cc ) கம்யூட்டர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2022 TVS Radeon இந்தியாவில் ரூ.59,925 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
110 ES MAG வேரியன்ட்டுக்கு மேற்கண்ட பைக்கை அறிமுகப்படுத்தி உள்ள டிவிஎஸ் நிறுவனம், இதில் DIGI Drum Dual Tone வேரியன்ட் பைக்கை ரூ.71,966 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய TVS ரேடியான் பைக்கில் ப்ராபர்ட்டி TVS Intelligo (ISG மற்றும் ISS சிஸ்டம்) பொருத்தப்பட்டுள்ளது. இது பைக் ஓட்டுபவர்களுக்கு சிறந்த ரைடிங் அனுபவத்தையும் சிறந்த மைலேஜையும் வழங்குகிறது.
மேலும் இந்த TVS Radeon RTMi* (ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர்)* உடன் மல்டி-கலர் ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்டரை கொண்டு வரும் இந்தியாவின் முதல் 110 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். கிளாக், சர்விஸ் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், டாப் ஸ்பீட் & ஆவரேஜ் ஸ்பீட், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட் போன்ற 17 பயனுள்ள அம்சங்கள் இந்த பைக்கின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இருப்பதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
RTMi அம்சத்துடன் கூடிய ரிவர்ஸ் எல்சிடி கிளஸ்டர் ரைடிங் கண்டிஷன்களுக்கு ஏற்ப மோட்டார்சைக்கிளின் மைலேஜை கட்டுப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. அதாவது பிஸியான ட்ராஃபிக் சிக்னல்கள் மற்றும் தற்காலிக பைக்கை சிறிது நேரம் ஒட்டாமல் நிறுத்தும் சமயத்தில் வாகனம் குறிப்பிட்ட நேரம் செயலற்ற முறையில் இருக்கும் போது TVS intelliGO அம்சமானது பைக்கின் எஞ்சினை தானே ஆஃப் செய்து நல்ல மைலேஜை உறுதி செய்கிறது.
Also Read : விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது கார் பாதுகாப்பு ரேட்டிங்.. எப்படி செயல்படும் தெரியுமா.?
இதன் மூலம் எரிபொருள் விரயம் மற்றும் கார்பன் உமிழ்வைத் தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. தோற்றத்தைப் பொறுத்தவரை இந்த அப்டேட்டட் மோட்டார் பைக்கில் பிரீமியம் குரோம் ஹெட்லேம்ப், குரோம் ரியர் வியூ மிரர்ஸ், ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்பு இடம்பெற்றுள்ளன. புதிய டிவிஎஸ் ரேடியான் மொத்தம் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும்.
1. Base edition
2. Dual-tone edition Drum with reverse LCD cluster
3. Dual-tone edition Drum with reverse LCD cluster and ISG/ISS
4. Dual-tone edition Disc with LCD cluster
Also Read : ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் பேட்டரியை உருவாக்கும் சீன நிறுவனம்.!
2022 TVS Radeon 7,000 rpm-ல் 8.4 PS பவரையும் 5,000 rpm-ல் 8.7 Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 109.7cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு Dura-Life இன்ஜினை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோட்டார் பைக்கில் 10 லிட்டர் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. TVS-ன் EcoThrust Fuel-injection (ET-Fi) தொழில்நுட்பத்தையும் இது பெறுகிறது. இந்த பைக் Hero Splendor Plus XTEC, Honda Livo போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.