தமிழகத்தின் தலைநகரமான சென்னையை தலைமையிடமாக கொண்ட டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 125 கோல்டு (TVS HLX 125 Gold) மற்றும் டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 150 கோல்ட் (TVS HLX 150 Gold) ஆகிய லிமிட்டட் எடிஷன்களை கென்யாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு ஸ்பெஷல் லிமிட்டட் எடிஷன்களும் உலகளாவிய TVS HLX-ன் 20 லட்சம் யூனிட் விற்பனையை நினைவுகூரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. TVS HLX சீரிஸ் கடந்த 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. பல பயண தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் மில்லியன் கணக்கான ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஒரு முக்கிய மற்றும் ஒருங்கிணைந்த பங்கை கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக தலைவர் எச்.ஜி.ராகுல் நாயக் கூறுகையில், கென்யா எங்கள் நிறுவனத்திற்கு முக்கியமான சந்தை. வாடிக்கையாளர்கள் எப்போதும் லாங்-லாஸ்ட்டிங் மற்றும் டியூரபுள் தயாரிப்புகளைத் தேடுகிறார்கள்.
கென்யாவில் உள்ள எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக TVS HLX-ன் 2 ஸ்பெஷல் லிமிட்டட் எடிஷன்களை பல ஃபர்ஸ்ட் -இன்-செக்மென்ட்ஸ் பண்புகளுடன் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எடிஷன்கள் ஆப்பிரிக்கா முழுவதும் வாடிக்கையாளர்களின் இதயங்களை வெல்லும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
TVS HLX சீரிஸ் மோட்டார் சைக்கிள்கள், ஆப்பிரிக்காவில் டூ-வீலர் டாக்ஸி செக்மென்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கமர்ஷியல் டாக்சிகள் மற்றும் டெலிவரி செக்மென்ட்ஸ்களுக்கு லாஸ்ட்-மைல் கனக்டிவிட்டியை வழங்கி உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமிட்டட் எடிஷன்களான TVS HLX 150 Gold மற்றும் TVS HLX 125 Gold ஆகியவை பாதுகாப்பிற்காக Smart Lock (key-FOB-ஐ பயன்படுத்தி திருட்டு எதிர்ப்பு பாதுகாப்பு அம்சம்) போன்ற அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
Also Read : 140 கிமீ ரேன்ஞ்சில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் : விலை மற்றும் அம்சங்கள்!
மேலும் இந்த புதிய லிமிட்டட் எடிஷன் பைக்குகள் ஃப்யூயல் டேங்கில் ஸ்டைலான கிராபிக்ஸ் மற்றும் கென்ய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சைட் கவருடன் வருகிறது. இந்த மோட்டார் சைக்கிள்கள் புதிய நிறமான ஸ்டார்லைட் ப்ளூ மற்றும் பர்கண்டி சீட் கலரில் வருகிறது. மேலும் இது தங்க நிறத்தில் ஃப்ரன்ட் மற்றும் ரியர் சஸ்பென்ஷனையும் பெறுகிறது. இந்த மோட்டார் சைக்கிள்கள் டி.வி.எஸ் மோட்டாரின் புதிய 3டி லோகோவுடன் வருகின்றன.
Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்
TVS HLX ஆனது டூயல்-ஸ்டேஜ் ஃபில்ட்ரேஷன் டெக்னலாஜி மற்றும் USB சார்ஜர்கள், அபாய விளக்குகள், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் போன்ற அம்சங்கள் மற்றும் டியூரபுள் எஞ்சினுடன் வருகிறது. TVS HLX சீரிஸ் ஆனது TVS HLX PLUS (100-cc), TVS HLX 125, TVS HLX 150 மற்றும் TVS HLX 150X ஆகிய வேரியன்ட்ஸ்களில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சுமார் 49 நாடுகளில் கிடைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, TVS