ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கனெக்டிவிட்டி & டெக்னலாஜியை அடிப்படையாக கொண்ட புதிய NTorq 125 XT ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய TVS!

கனெக்டிவிட்டி & டெக்னலாஜியை அடிப்படையாக கொண்ட புதிய NTorq 125 XT ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய TVS!

TVS NTorq 125 XT

TVS NTorq 125 XT

TVS NTorq 125 XT | புதிய TVS Ntorq 125 XT ஸ்கூட்டரானது ஏற்கனவே விற்பனையில் உள்ள மற்ற NTorq 125 ஸ்கூட்டர்களை போலில்லாமல் தனித்து நிற்கும் வகையில் பல கனெக்டட் அம்சங்களுடன் வருகிறது. இந்த அம்சங்களில் TFT மற்றும் LCD பேனல்கள் இரண்டையும் கொண்டுள்ள ஒரு புதிய ஹைப்ரிட் SmartXonnect டிஸ்ப்ளே அடங்கும். NTorq 125 XT-ல் உள்ள SmartXonnect டிஸ்ப்ளே 2 முக்கிய புதிய அப்டேட்ஸ்களை கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான TVS மோட்டார், அதன் பிரபல மற்றும் ஸ்போர்ட்டியான 125 cc ஸ்கூட்டரின் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் அதன் TVS NTorq 125 ஸ்கூட்டரில் புதிதாக XT என்ற வேரியன்ட்டை கொண்டு வந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பல தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய இந்த புதிய TVS NTorq 125 XT ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1,02,823 ஆகும். இந்த புதிய மாடல் டிஸ்க் பிரேக் வேரியன்ட்டில் கிடைக்கிறது. மேலும் இந்த புதிய ஸ்கூட்டர் வண்ணமயமான TFT மற்றும் LCD கன்சோலைக் கொண்ட ஹைப்ரிட் SmartXonnect சிஸ்டம் உட்பட ஃபர்ஸ்ட் -இன்-கிளாஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது.

புதிய TVS NTorq 125 XT-ன் அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டாரின் மூத்த அதிகாரியான அனிருத்தா ஹல்தார் கருத்து தெரிவிக்கையில், எங்களின் TVS Ntorq 125 ஸ்டைல், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிலும் தனித்துவமாக இருந்து வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான ஸ்போர்ட்டி 125cc ஸ்கூட்டராக மாறியுள்ளது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள புதிய TVS NTorq 125 XT கனெக்டிவிட்டி மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. இந்த ஸ்கூட்டர் இதுவரை பார்த்திராத ஹைடெக் அம்சங்களுடன் இணைக்கப்பட்டது மற்றும் டூ வீலர் இயக்க அனுபவத்தில் புதிய பெஞ்ச்மார்க்கை அமைத்துள்ளது என்றார்.

புதிய TVS Ntorq 125 XT ஸ்கூட்டரானது ஏற்கனவே விற்பனையில் உள்ள மற்ற NTorq 125 ஸ்கூட்டர்களை போலில்லாமல் தனித்து நிற்கும் வகையில் பல கனெக்டட் அம்சங்களுடன் வருகிறது. இந்த அம்சங்களில் TFT மற்றும் LCD பேனல்கள் இரண்டையும் கொண்டுள்ள ஒரு புதிய ஹைப்ரிட் SmartXonnect டிஸ்ப்ளே அடங்கும். NTorq 125 XT-ல் உள்ள SmartXonnect டிஸ்ப்ளே 2 முக்கிய புதிய அப்டேட்ஸ்களை கொண்டுள்ளது.

இதில் முதல் பெரிய அப்டேட் TVS SmartXtalk ஆகும். இந்த அம்சம் Ntorq 125 XT உரிமையாளர்கள் வாய்ஸ் அசிஸ்டென்ட் உதவியுடன் கட்டளைகளை பயன்படுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் இந்த அம்சம் Ntorq XT-ன் மோட்களை மாற்ற, ஸ்கிரீனின் பிரைட்னஸை அட்ஜஸ்ட் செய்ய, பாடல்களை மாற்ற என பலவற்றுக்கும் உதவுகிறது. தவிர எரிபொருள் அளவு குறைவாக இருக்கும் போது, எரிபொருள் வீணாகும் போது, மொபைல் பேட்டரி அளவு குறைவாக இருக்கும் போது இந்த அம்சம் ரைடர்களை எச்சரிக்கும்.

Also Read : பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்..

புதிய TVS Ntorq 125 XT-ல் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் SmartXtrack என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் புதிய ட்ராஃபிக் டைம் ஸ்லைடர் ஸ்கிரீன்களுடன் வருகிறது, ட்ராஃபிக் சிக்னலில் காத்திருக்கும் நேரத்தில் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட கேம்களின் ஸ்கோர்ஸ், சோஷியல் மீடியா அப்டேட்ஸ், செய்திகள், வானிலை மற்றும் பிறவற்றை ஸ்லைடர் ஸ்க்ரீன்ஸ் மூலம் ரைடர்கள் பார்த்து தெரிந்து கொள்ள இந்த அம்சம் உதவுகிறது. Ntorq 125 XT அதன் மற்ற Ntorq 125 ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது இயந்திர ரீதியாக மாறாமல் உள்ளது. புதிய TVS Ntorq 125 XT 124.8 cc, 3-வால்வு, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் எஞ்சினினை பெறுகிறது. Ntorq 125 XT இன் எஞ்சின் 7,000rpm இல் 9.25bhp மற்றும் 5,500rpm இல் 10.5Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் ரியர் வீலுக்கு பவர் அனுப்பப்படுகிறது.

Also Read : ரூ.2 லட்சத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த பைக்குகளின் பட்டியல்..!

இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள TVS IntelliGO தொழில்நுட்பம் அமைதியான, மென்மையான மற்றும் சிறந்த ஸ்டார்ட்-ஸ்டாப் செயல்பாட்டுடன் உள்ளது. கூடுதலாக, இது லைட்டர் மற்றும் ஸ்போர்டியர் அலாய் வீலை கொண்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, TVS