ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டி.வி.எஸ் ஜூப்பிட்டர் முதல் ஹோண்டா ஆக்டிவா 6 ஜி வரை... Honda Dio-க்கு மாற்றாக டாப் 5 ஸ்கூட்டர்ஸ்!

டி.வி.எஸ் ஜூப்பிட்டர் முதல் ஹோண்டா ஆக்டிவா 6 ஜி வரை... Honda Dio-க்கு மாற்றாக டாப் 5 ஸ்கூட்டர்ஸ்!

Honda Dio-க்கு மாற்றாக டாப் 5 ஸ்கூட்டர்ஸ்

Honda Dio-க்கு மாற்றாக டாப் 5 ஸ்கூட்டர்ஸ்

நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று TVS Jupiter. ஸ்டாண்டர்டு, இசட்.எக்ஸ் மற்றும் கிளாசிக் ஆகிய 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

ஜப்பான் பிராண்டான ஹோண்டா டியோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனுடைய ஸ்போர்ட்டி தோற்றம் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இந்த ஸ்கூட்டரின் நியூ ஜெனரேசன் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, மார்க்கெட்டில் அந்த மாடல்களும் ஏகோபித்த வரவேற்பை பெற்றன.

ஸ்போர்டியர் டிசைன், எல்.இ.டி ஹெட்லேம்ப், எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 110 சிசி என்ஜினைக் கொண்டுள்ளது. 8 பிஎச்பி மற்றும் 9 என்.எம் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த ஸ்கூட்டர் ரூ. 65,075 முதல் ரூ. 70,973 என்ற விலையில் கிடைக்கின்றன. இதே அம்சங்களைக் கொண்ட வேறு சில ஸ்கூட்டர்களும் மார்க்கெட்டில் இருக்கின்றன. அவற்றை வாங்க விரும்புவோருக்கான பட்டியல் இதோ..

1. ஹீரோ ப்ளேஷர் பிளஸ் (Hero Pleasure Plus) :

ஸ்கூட்டர் மாடலில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மாடலில் ஹீரோ ப்ளேஷர் பிளஸூம் ஒன்று. 8 பிஎச்பி மற்றும் 9 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 110 சிசி எஞ்சினைக் கொண்டது. ஸ்கூட்டர் xSens என்ற தொழில்நுட்பமும், 8 வெவ்வேறு சென்சார்களும் உள்ளன. அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அடிப்படை வசதிகளுடனும் வருகிறது. இருப்பினும், நிறுவனம் சமீபத்தில் ஹீரோ ப்ளேஷர் பிளஸ் எக்ஸ்-டெக், சில மாறுதல்களையும் அறிமுகப்படுத்தியது. இதில், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் எஸ்.எம்.எஸ் மற்றும் மிஸ்டு கால் காண்பிக்கும் வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Hero Pleasure Plus விலை: ரூ. 61,900 முதல் ரூ.69,500 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

2. டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) :

நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று TVS Jupiter. ஸ்டாண்டர்டு, இசட்.எக்ஸ் மற்றும் கிளாசிக் ஆகிய 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் மற்றும் இசட்எக்ஸ் மாடல் ஒரே மாதிரியாக இருக்கும். ஸ்டாண்டர்ட் மற்றும் ZX மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை இடம்பெற்றிருக்கும். அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர், ஓடோமீட்டர், கடிகாரம், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற ரீட்அவுட்களுக்கான டிஜிட்டல் எல்சிடியும் இருக்கும். TVS Jupiter ZX ஆனது 8 bhp மற்றும் 9 Nm பீக் டார்க்கை உருவாக்கும் 110 cc இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

TVS Jupiter விலை: ரூ.66,273 முதல் ரூ. 76,453 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

3. TVS ஸ்கூட்டி Zest 110 (TVS Scooty Zest 110) :

TVS Scooty Zest 110 என்பது TVS Scooty Pep -ன் அதிக திறன் கொண்ட பதிப்பாகும். 8 பிஎச்பி மற்றும் 9 என்எம் பீக் டார்க்கை வழங்கும் 109.7 சிசி பவர் பிளாண்ட்டைக் கொண்டுள்ளது. இது LED DRL, அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் போன்ற சில அம்சங்களும் இடம்பெற்றிருகும். Zest 110, இலகுரக ஸ்கூட்டர்.

TVS ஸ்கூட்டி Zest 110 விலை: ரூ.66,318 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

Also read... ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ செல்லலாம்… அசரவைக்கும் மின்சார ஸ்கூட்டர்!

4. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (Hero Maestro Edge 110) :

மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர், 8 பிஎச்பி மற்றும் 9 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும் 110 சிசி பவர் பிளாண்ட்டுடன் வருகிறது. மற்ற ஹீரோ இரு சக்கர வாகனங்களைப் போலவே, இந்த ஸ்கூட்டரிலும் xSens தொழில்நுட்பம் இருக்கும். இதில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் எரிபொருள்-திறனுக்கான பல சென்சார்கள் உள்ளன. ஸ்கூட்டர், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சைட்-ஸ்டாண்ட் இண்டிகேட்டர், யூ.எஸ்.பி போர்ட், காம்பினேஷன் லாக், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.

Hero Maestro Edge 110 விலை: ரூ. 66,400 முதல் ரூ. 71,200 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

5. ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G) :

ஹோண்டா ஆக்டிவா அநேகமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 110 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்று. இதனுடைய என்ஜின் தரம், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த என்ஜின் 8 பிஎச்பி மற்றும் 9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். ஆறாவது தலைமுறை ஆக்டிவாவில், எல்இடி ஹெட்லேம்ப், ஏசிஜி சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், இன்ஹிபிட்டர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய சைட்-ஸ்டாண்ட் இண்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளது. குறைந்த பராமரிப்பு செலவுடையதாக இருப்பதால், இந்த ஸ்கூட்டர் அதிக விற்பனையாகிறது.

Honda Activa 6G விலை: ரூ.69,645 முதல் ரூ.71,391 (எக்ஸ்-ஷோரூம்)

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Honda Activa, TVS