ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பிஎம்டபிள்யூ 310cc பைக்குகள் உற்பத்தி.. டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய சாதனை!

பிஎம்டபிள்யூ 310cc பைக்குகள் உற்பத்தி.. டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய சாதனை!

BMW G310

BMW G310

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 1 லட்சம் யூனிட் பைக்குகளின் விநியோகத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஊரடங்கு காலத்தில், அனைத்து தொழில் துறையும் முடங்கி, தற்போது துளிர் விடத் தொடங்கிய நேரத்தில், இந்த செய்தி அனைவர் மனதிலும் நம்பிக்கையை விதித்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், வியாழன் அன்று, 1 லட்சம் பிஎம்டபிள்யூ மோட்டோராட் 310cc பைக்குகளை தனது ஓசூர் உற்பத்தி ஆலையில் இருந்து விநியோகித்துள்ளதாக அறிவித்தது. இதை, ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றியது மிகப்பெரிய சாதனையாகும்.

உலகம் முழுவதிலும் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளில், 10 சதவிகிதம் பைக்குகள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று ஒழுங்குமுறை தாக்கல் செய்த போது அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய, கடந்த 2013 ஆம் ஆண்டு, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. உலக சந்தை பயன்பாட்டுக்கு, 500cc துணை மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி, உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Also Read: Youtube மூலம் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? வழிமுறை இதோ…

இதன் தொடர்ச்சியாக, மூன்று 310cc தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, பிஎம்டபிள்யூ G 310 R, பிஎம்டபிள்யூ 310 GS மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் டிவிஎஸ், மிகவும் பிரபலமான Apache RR 310 ஆகிய மாடல்களாகும். இந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுமே, ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலையில் தான் தயாரிக்கப்பட்டன என்றும் நிறுவனம் தெரிவித்தது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கே.என் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இந்த சாதனை எங்களுடைய 8 ஆண்டு கால பார்ட்னர்ஷிப்புக்கு கிடைத்த வெற்றியின் சான்றாகும். மேலும், இது இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரு பொதுவான கற்றல் தளத்தையும் உருவாக்கியுள்ளது. எங்கள் பார்ட்னர்ஷிப், உலக சந்தையில், அனைவரும் மிகவும் விரும்பக்கூடிய வாகனங்களை உருவாக்குகிறது.”

Also Read: 24 மணிநேரத்தில் 4,384 கிமீ… வேகத்தில் சாதனை படைத்த மகிந்திரா எக்ஸ்.யூ.வி 700!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் தலைவர் மார்கஸ் ஸ்க்ராம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான எங்களின் உறுதியான பார்ட்னர்ஷிப், துணை 500 சிசி பிரிவில் ஈர்க்கக்கூடிய சலுகைகளை உருவாக்க பெரிதும் உதவி செய்தது என்று தெரிவித்தார்.

“சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, ஒற்றை சிலிண்டர் மாடல்களான BMW G310 R மற்றும் BMW G 310 GS, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. மேலும், தொடர்ந்து பல தரப்பினராலும் பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றன. தற்போது பிஎம்டபள்யூ மோட்டோராட் 310cc சீரிஸ் 1 லட்சம் யூனிட்டுகள் விநியோகம் செய்துள்ள நிலையில், மற்ற இரண்டு ஆல்-ரவுண்டர்களும், பிஎம்டபள்யூ மோட்டோராட் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன” என்று தெரிவித்தார்.

Also Read: அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 – ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

மோட்டர்ராட் மாடல்களான BMW G 310 R மற்றும் BMW 310 GS இரண்டுமே, தற்போது 120 நாடுகளில் கிடைக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு நம் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி பாராட்டுக்குரியதாக உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Automobile, TVS