Home /News /automobile /

இந்தியாவில் Trident 660 பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்திய Triumph Motorcycles நிறுவனம்..

இந்தியாவில் Trident 660 பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்திய Triumph Motorcycles நிறுவனம்..

Triumph Trident 660

Triumph Trident 660

Triumph Trident 660 | பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான Triumph Motorcycles இந்தியாவில் தனது என்ட்ரி லெவல் ரோட்ஸ்டரான ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 (Triumph Trident 660) பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

புத்தாண்டு பிறந்து ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் பல வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை கடந்த மாதம் உயர்த்தின. ஆனால் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா (Triumph Motorcycles India) நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான விலையை உயர்த்தாமல் இருந்தது. ஆனால் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா புத்தாண்டு விலை உயர்வை சற்று தாமதமாக அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இறுதியாக தனது நிறுவன வாகன விலையில் உயர்வை அறிவித்து இருக்கிறது குறிப்பிட்ட இந்த நிறுவனம்.

பிப்ரவரி 2022-ல் விலையை உயர்த்தி இருக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் தற்போது Triumph Motorcycles India நிறுவனமும் இணைந்து உள்ளது. பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான Triumph Motorcycles இந்தியாவில் தனது என்ட்ரி லெவல் ரோட்ஸ்டரான ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 (Triumph Trident 660) பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் மலிவான பைக்காக இருந்து வந்த Triumph Trident 660 பைக்கை வாங்குபவர்கள் கடந்த மாதத்தில் இருந்த விலையை விட இந்த மாதம் முதல் கூடுதலாக அரை லட்சம் ரூபாய் அதாவது 50,000 ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டும்.

ஆம், Triumph Trident 660 பைக்கின் விலையை அதிரடியாக ரூ.50,000 வரை உயர்த்தி இருக்கிறது Triumph Motorcycles India நிறுவனம். இந்த அதிரடி விலை உயர்வை தொடர்ந்து நேற்று முதல் (1.2.22) Triumph Trident 660 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இப்போது ரூ.7.45 லட்சமாக உள்ளது. இந்த புதிய விலை உயர்வு 1 பிப்ரவரி 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாடு முழுவதும் உள்ள அனைத்து ட்ரையம்ப் டீலர்ஷிப்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. Trident 660 பைக் முதன் முதலில் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 2021-ல், ரூ.6.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.



ட்ரைடென்ட் 660 ஒரு நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் பைக் ஆகும், மேலும் இது ரவுண்ட் ஹெட்லேம்ப், கர்வி ஃபியூயல் டேங்க், ஒரு ஜோடி வைட் ஹேண்டில்பார்கள் போன்ற மிகவும் ஸ்டைலான டிசைன் காம்போனென்ட்களை கொண்டுள்ளது. இந்த பைக்கின் அழகியல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சில ரைடிங் மோட்கள், ஸ்விச்சபிள் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரைடென்ட் 660 பைக்கில் துல்லியமான த்ரோட்டில் சிஸ்டத்திற்காக ரைடு-பை-வயர் (ride-by-wire) பொருத்தப்பட்டுள்ளது. Triumph Trident 660 பைக் 660 சிசி, டிரிபிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 10,250 rpm-ல் 80 bhp பவரையும், 6,250 rpm-ல் அதிகபட்சமாக 64 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைந்து பவர்பிளாண்ட் வழங்கப்படுகிறது. Triumph Trident 660 பைக்கானது Kawasaki Z650 மற்றும் Honda CB650R போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Bike, India, Price hike

அடுத்த செய்தி