Home /News /automobile /

இந்தியா to வியட்நாம்... வெறும் ரூ.9க்கு விண்ணில் பறக்கலாம் - அதிரடி சலுகை

இந்தியா to வியட்நாம்... வெறும் ரூ.9க்கு விண்ணில் பறக்கலாம் - அதிரடி சலுகை

இந்தியா - வியட்நாம்

இந்தியா - வியட்நாம்

வியட்நாம் நாட்டை சேர்ந்த வியட்ஜெட்(Vietjet) நிறுவனம் வெறும் 9 ரூபாய்க்கு இந்தியா – வியட்நாம் வரை விண்ணில் பறக்கலாம் என்று டிக்கெட்டில் அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

    வியட்நாட் நாட்டின் விமான சேவை நிறுவனமான வியட்ஜெட் இந்தியாவில் விமான சேவையை செயல்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக விமான சேவை தொடங்கிய காலத்தில், அறிமுக சேவையாக 3 நாள் புக்கிங் திட்டத்தின் கீழ், வெறும் 9 ரூபாய்க்கு டிக்கெட்களை வழங்கியது. இதோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் பயணிகளைக் கவரும் வகையில் டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்தது வியட்ஜெட் விமான சேவை நிறுவனம். இதன் தொடர்ச்சியாக தற்போது விமான டிக்கெட்டில் அதிரடி விலை குறைப்பையும் அறிவித்துள்ளது.

    இந்தியாவிலிருந்து வியட்நாமுக்கு சமீபத்தில் 17 நேரடி இணைப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனை கௌரவிக்கும் வகையில் Vietjet  விளம்பர டிக்கெட்டுகளை மிக குறைந்தக் கட்டணத்தில் வழங்குகிறது. வியட்ஜெட் அறிவித்துள்ள ரூ.9க்கு எடுக்கும் டிக்கெட்களைப் பயன்படுத்தி இந்தியாவில் புதுடெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் வியட்நாமில் ஹனோய், ஹோ சிமின் சிட்டி, டா நாங் மற்றும் ஃபூ குவோக் ஆகிய நகரங்களுக்கு விண்ணில் பறக்கலாம். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அனைத்து வழித்தடங்களுக்குமான டிக்கெட் சலுகைகள் ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை உள்ளது.

    ALSO READ | வீட்டு நாயை குளிக்க வைக்க மறுத்த கன்மேனை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.. அதிரடி காட்டிய ஐ.ஜி!
     இதோடு அஹமதாபாத், ஹைதராபாத், பெங்களூருவை , ஹனோய், ஹோ சிமின் சிட்டி, டா நாங்குடன் இணைக்கும் ஒன்பது புதிய வழித்தடங்கள் வருகின்ற செப்டம்பர் முதல் 4 வாராந்திர விமானங்களுடன் இயக்கப்படும் என்றும் இந்தாண்டு இறுதிக்குள் மும்பை, புதுடெல்லி முதல் டா நாங் வரையிலான மற்ற இரண்டு புதிய வழித்தடங்களும் செயல்படத் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது புதுடெல்லி மற்றும் மும்பையுடன் வியட்நாமில் ஹனோய், ஹோசிமின் நகரத்துடன் இணைக்கும் விமான சேவைகள் வாரத்திற்கு 3-4 விமானங்களை இயக்குகிறது.


    இந்நிலையில் தான் புதுடெல்லி, மும்பைக்கு Phu Quoc சேவைகள் வருகின்ற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Vietjetன் நேரடி விமான நெட்வொர்க் பயணிகளுக்காக 17 வழித்தடங்களுக்கு முன்பை விட மிகவும் வசதியான மற்றும் செலவு சேமிப்புப் பயண வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் பயணிகள் இப்போது வியட்நாமில் உள்ள தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு ஐந்து மணிநேர விமானங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.



    குறிப்பாக Vietjet இன் தெற்கு - தென்கிழக்கு - வடகிழக்கு ஆசிய இணைப்பின் மூலம் இந்தியப் பயணிகள் வியட்நாம் மட்டுமின்றி, பாலி, சிங்கப்பூர், கோலாலம்பூர், சியோல், பூசன், டோக்கியோ, ஒசாகா, ஃபுகுவோகா, நகோயா மற்றும் தைபே போன்ற தென்கிழக்கு ஆசிய இடங்களுக்கு செல்வதை எளிதாக்கும் வகையில் உள்ளது.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Flight, Flight travel, Vietnam

    அடுத்த செய்தி