2030-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியுமா?- எரிசக்தி வள நிறுவனத் தலைவர் விளக்கம்

’சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே முழுவீச்சில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க முடியும்’.

Web Desk | news18
Updated: July 21, 2019, 8:43 PM IST
2030-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியுமா?- எரிசக்தி வள நிறுவனத் தலைவர் விளக்கம்
அஜய் மாத்தூர் (Image: TERI)
Web Desk | news18
Updated: July 21, 2019, 8:43 PM IST
எரிபொருள் மூலமாக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் முறையிலிருந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் முறையை நோக்கி இந்தியா மாற 2030-ம் ஆண்டுக்கு மேலாகக் கூட ஆகும் என்கிறார் டெரி தலைவர் அஜய் மாத்தூர்.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 சதவிகித எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு கொண்ட நாடாக மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. 150cc-க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள் 2025-ம் ஆண்டுக்குப் பின் வெளியாகும் போது அவை எலெக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், மார்ச் 31, 2023-ம் ஆண்டுக்குப் பின் வெளிவரும் மூன்று சக்கர வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெரி என்னும் எரிசக்தி வள நிறுவனத் தலைவர் அஜய் மாத்தூர் கூறுகையில், “எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் முன் நுகர்வோர்கள் ஏற்றுக்கொள்வார்களா, எலெக்ட்ரிக் வாகனம் மீது விருப்பம் ஏற்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இங்கு நுகர்வோர் அடிப்படையிலான சந்தையே உள்ளது. இதனால் நுகர்வோரின் விருப்பு வெறுப்புகள் முக்கியம். இந்த இடத்தில் நாம் தற்போது இல்லை. எரிபொருள் பயன்பாட்டிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாற வைப்பது மிகப்பெரும் சவால். பழைய வாகனங்களை ஒழிக்கவும் புது வாகனங்களை வாங்க வைக்க சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும்.

2023-25-ம் ஆண்டுக்குள் இதை சாத்தியமாக்க நினைப்பது எப்படி என எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு வேகமாக இந்த மாற்றம் இந்தியாவில் சாத்தியம் எனத் தோன்றவில்லை. 2030-ம் ஆண்டுக்கு மேலாகக் கூட ஆகலாம். சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே முழுவீச்சில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க முடியும்” என்றார்.

மேலும் பார்க்க: நான்கு பைக்குகளுடன் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது AMW-CFமோட்டோ..!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...