HOME»NEWS»AUTOMOBILE»tractor industry in india registers 42 percent growth aru

ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலைக்கு மத்தியிலும் ட்ராக்டர் விற்பனையில் தொடர் முன்னேற்றம்

மகிந்திரா & மகிந்திராவின் ஸ்வராஜ் ட்ராக்டர்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளன. 2019 டிசம்பரில் அதன் விற்பனை 17,213 ஆக இருந்தது. அதவே, 2020 டிசம்பரில் இந்நிறுவன த்தின் 21,173 ட்ராக்டர்கள் விற்பனையாகியுள்ளன.

ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலைக்கு மத்தியிலும் ட்ராக்டர் விற்பனையில் தொடர் முன்னேற்றம்
மகிந்திரா & மகிந்திராவின் ஸ்வராஜ் ட்ராக்டர்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளன. 2019 டிசம்பரில் அதன் விற்பனை 17,213 ஆக இருந்தது. அதவே, 2020 டிசம்பரில் இந்நிறுவன த்தின் 21,173 ட்ராக்டர்கள் விற்பனையாகியுள்ளன.
  • Share this:

இந்தியாவில் புதிய ட்ராக்டர்களின் விற்பனை குறிப்பிடத்தக்க வகையில்  அதிகரித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு துறைகளும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் ஆட்டோமொபைல் துறையிலும் விற்பனையில் மந்த நிலை நிலவி வருகிறது. இருப்பினும் லாக் டவுனுக்கு பின்னர் பண்டிகை காலத்தில் வாகனங்களின் விற்பனை சற்று அதிகரித்திருந்தது இத்துறையினருக்கு ஆறுதலாக அமைந்தது.

ஆட்டோமொபைல் துறையில் ட்ராக்டர் செக்மெண்ட்டில் மட்டும் விற்பனை அளவு, குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது சமீபத்திய விற்பனை குறித்தான தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.





கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டில் மொத்தமாக 60,717 ட்ராக்டர்கள்
விற்பனையாகி இருக்கின்றன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 41.8% வளர்ச்சியாகும். டிசம்பர் 2019-ல் 42,806 ட்ராக்டர்கள் விற்பனையாகி இருந்தன. தொடர்ந்து 4வது மாதமாக ட்ராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

மகிந்திரா & மகிந்திராவின் ஸ்வராஜ் ட்ராக்டர்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளன. 2020 டிசம்பரில் இந்நிறுவன த்தின் 21,173 ட்ராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே 2019 டிசம்பரில் 17,213 ஆக இருந்தது.

இவற்றிற்கு அடுத்ததாக டாஃபே நிறுவன ட்ராக்டர்கள் டிசம்பரில் 11,095 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதுவே 2019 டிசம்பரில் 6,952 யூனிட்டுகளே விற்பனையாகி இருந்தன.

3வதாக சோனாலிகாவின் 8,538 ட்ரார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் 2.5 % ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்களிப்பு தற்போது 11.5% என்ற அளவில் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.



4வது இடத்தில் ஜான் டீர் நிறுவனமும் 5வது இடத்தை எஸ்கார்ட் நிறுவனமும் பிடித்துள்ளன. இதில் மிகவும் கவனிக்கத்தக்க உயர்வை எஸ்கார்ட் நிறுவனம் அடைந்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் 3,806 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்த நிலையில் கடந்த 2020 டிசம்பரில் 7,230 ட்ராக்டர்கள் விற்பனையாகி உள்ளது. இது 90% க்கும் அதிகமான உயர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது.

காரணங்கள் இவை தான்:

நல்ல பருவ மழைக்காலம், இலகுவான கடன் வசதி, பயிர்களின்
குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு போன்றவை ட்ராக்டர் விற்பனை
அதிகரிப்புக்கு காரங்களாக சொல்லப்படுகிறது.
Published by:Arun
First published: