Home /News /automobile /

போர் எதிரொலி: ரஷ்யாவில் கார் உற்பத்தி மற்றும் வாகன இறக்குமதியை நிறுத்திய டொயோட்டா நிறுவனம்...

போர் எதிரொலி: ரஷ்யாவில் கார் உற்பத்தி மற்றும் வாகன இறக்குமதியை நிறுத்திய டொயோட்டா நிறுவனம்...

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டா மோட்டார் கார்ப் தனது ரஷ்ய தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

  உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் கூறி உள்ள நிலையில், ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டினாலும் மறுபக்கம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் வகையில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய படை. இந்த இரு நாடுகளின் மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.

  இதனிடையே ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப் (Toyota Motor Corp) தனது ரஷ்ய தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் விநியோக சங்கிலி இடையூறு (supply chain disruptions) காரணமாக ரஷ்யாவிற்கான வாகன இறக்குமதியும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப் கூறி இருக்கிறது.

  ரஷ்யாவில் உள்ள அதன் ஒரே தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்தி விட்டு, உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலுடன் தொடர்புடைய "விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளை" அதாவது உதிரிபாகங்களை வாங்குவதில் உள்ள சிரமம் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி, நாட்டிற்கு வாகனங்களை அனுப்புவதை நிறுத்துவதாக டொயோட்டா கூறி இருக்கிறது.

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து பல மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவில் தொழில் நடத்தும் வாய்ப்புகளை நிராகரித்துள்ளன. சில மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவில் செய்துள்ள முதலீடுகளை விட்டு வெளியேறுவதாக கூறி இருக்கின்றன. ஆனால் பல ஜப்பானிய நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் அமைதி காட்டி வருகின்றன.

  இதனிடையே டொயோட்டா தனது அறிக்கை ஒன்றில், "உலகெங்கிலும் உள்ள அனைவரையும் போலவே, நாங்களும் உக்ரைன் மக்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் அங்கு நடந்து வரும் முன்னேற்றங்களை கவனித்து வருகிறோம். மேலும் அந்நாட்டில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்து உள்ளது.

  ரஷ்யாவின் சிறந்த ஜப்பானிய பிராண்டாக இருந்து வரும் டொயோட்டா அதன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் ஆண்டுக்கு சுமார் 80,000 வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதனிடையே டொயோட்டாவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தற்போது ஏற்பட்டுளள விநியோக சிக்கல் (supply disruption) ரஷ்யா - உக்ரைன் மோதலுடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தினார்.

  போரால் மக்கள் அகதிகளாக வெளியேறும்போது பியானோ வாசித்து ஆறுதல் அளித்த பெண் - நெகிழ்ச்சி வீடியோ

  இதனிடையே கடந்த ஆண்டு ரஷ்யாவில் சுமார் 30,000 கார்களை விற்பனை செய்த ஜப்பானிய நிறுவனமான Mazda Motor Corp, விளாடிவோஸ்டோக்கில் உள்ள அதன் கூட்டுத் தொழிற்சாலைக்கான பாகங்கள் ஏற்றுமதி விரைவில் முடிவடையும் என்று கூறி இருக்கிறது. 2020-ஆம் நிதியாண்டில் மொத்தம் 1,406 கார்கள் விற்பனையாகியிருந்தாலும், வாகனங்களை அனுப்புவதில் உள்ள சிரமம் மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள சிரமம் ஆகியவை ரஷ்யாவிற்கு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் ஏற்றுமதியை நிறுத்த வழிவகுத்ததாக Honda Motor Co தெரிவித்துள்ளது.
  Published by:Karthick S
  First published:

  Tags: Russia, Toyota

  அடுத்த செய்தி