ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

2022 அக்டோபரில் திட்டமிட்டிருந்த வாகன உற்பத்தி எண்ணிக்கையை அதிரடியாக குறைத்த டொயோட்டா நிறுவனம்.! காரணம் என்ன.?

2022 அக்டோபரில் திட்டமிட்டிருந்த வாகன உற்பத்தி எண்ணிக்கையை அதிரடியாக குறைத்த டொயோட்டா நிறுவனம்.! காரணம் என்ன.?

டொயோட்டா

டொயோட்டா

பிரபல ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப், அடுத்த மாதம் (அக்டோபர் 2022) சர்வதேச அளவில் சுமார் 800,000 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்து உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  பிரபல ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப், அடுத்த மாதம் (அக்டோபர் 2022) சர்வதேச அளவில் சுமார் 800,000 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்து உள்ளது.

  பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட செமிகண்டக்டர் பற்றாக்குறை சிக்கல் இன்னும் சரி செய்யப்படாததன் காரணமாக முன்பு அறிவித்த சராசரி மாத உற்பத்தியில் சுமார் 1 லட்சம் வாகனங்களின் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் அதன் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

  நவீன கார்கள் சாஃப்ட்வேர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பெரிதும் சார்ந்துள்ளன. இந்த கார்களின் மூளையாக மைக்ரோசிப்கள் அல்லது செமிகண்டக்டர்கள் செயல்படுகின்றன.

  மைக்ரோசிப்கள் நவீன கார்களில் பாதுகாப்பு அமைப்புகள் முதல் இன்ஃபோடெயின்மென்ட் வரை, பவர்டிரெய்னில் இருந்து எரிபொருள் சிக்கனம் வரை பலவிதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. சிப்களின் கடுமையான பற்றாக்குறை உலகெங்கிலும் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது.

  பெருந்தொற்று குறைந்து நிலைமை படிப்படியாக இயல்பாகியுள்ள போதிலும் கார் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை முழுவீச்சில் மறுதொடக்கம் செய்த போது, சிப் உற்பத்தியாளர்களால் தேவையை சமாளிக்க முடியவில்லை. இன்னும் இந்த நிலை நீடிக்கிறது.

  முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் டொயோட்டா நிறுவனம் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் (3 மாதங்களில்) மாதத்திற்கு சராசரியாக சுமார் 9 லட்சம் யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டு உள்ளதாக அறிவித்து இருந்தது.

  ஆனால் சமீபத்திய இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த வாகன உற்பத்தி எண்ணிக்கையில் அதாவது 9 லட்சம் யூனிட்டில், வரும் அக்டோபர் மாதம் 1 லட்சம் வாகனங்களின் உற்பத்தி இருக்காது என்று டொயோட்டா மோட்டார் கார்ப் தெளிவுபடுத்தி உள்ளது.

  சுமார் 1 லட்சம் யூனிட்கள் தயாரிக்கும் முடிவை வரும் மாதம் கைவிட்டுள்ளதால் 7 உள்நாட்டு தொழிற்சாலைகளில் 10 லைன்களுக்கான உற்பத்தியை சுமார் 12 நாட்கள் வரை நிறுத்தி வைக்கவும் டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டொயோட்டா,

  அக்டோபரில் வாகன உற்பத்தி திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் மார்ச் 2023 வரையிலான நடப்பு நிதியாண்டில் 9.7 மில்லியன் உலகளாவிய வாகன உற்பத்தி இலக்கை அடைவதில் தீர்மானமாக உள்ளது. அக்டோபர் - டிசம்பர் வரை சராசரியாக மாதத்திற்கு சுமார் 850,000 வாகனங்களை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாக சமீபத்திய அறிக்கையில் டொயாட்டோ தெரிவித்துள்ளது.

  Read More: இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் எதற்கு எனத் தெரியுமா? 

  செமிகண்டக்டர் பற்றாக்குறையால் டொயோட்டா மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற வாகன உற்பத்தியாளர்கள் நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

  சிப் பற்றாக்குறையால் பல வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி ஆலைகளை சில மாதங்கள் தற்காலிகமாக மூட வேண்டிய சூழலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Car, Toyota