Home /News /automobile /

2,700 எலெக்ட்ரிக் கார்களை திரும்ப பெறும் டொயோட்டா.. காரணம் இதுவா? 

2,700 எலெக்ட்ரிக் கார்களை திரும்ப பெறும் டொயோட்டா.. காரணம் இதுவா? 

Toyota Bz4x recall | டொயோட்டா நிறுவனம்  சக்கரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் உள்ள 2,700 bZ4X எலெக்ட்ரிக்  கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 

Toyota Bz4x recall | டொயோட்டா நிறுவனம்  சக்கரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் உள்ள 2,700 bZ4X எலெக்ட்ரிக்  கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 

Toyota Bz4x recall | டொயோட்டா நிறுவனம்  சக்கரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் உள்ள 2,700 bZ4X எலெக்ட்ரிக்  கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 

டொயோட்டா நிறுவனம் சக்கரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் உள்ள 2,700 bZ4X எலெக்ட்ரிக் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது முதல் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. bZ4X காரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 போன்ற கார்களுக்கு போட்டியாக முன்புற டிரைவ் (FWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) போன்ற வசதிகளுடன் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது முதல் மெயின்ஸ்ட்ரீம் எலெக்ட்ரிக் கார் மற்றும் அதன் முழு அளவிலான பிக்கப் டிரக்குகளில் bZ4X மாடலில் நட்டுகள் அல்லது போல்ட்கள் தளர்ந்து, சக்கரங்கள் கழன்று போக வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டு, இதுவரை விற்பனை செய்யப்பட்ட 2,700 கார்களை டொயோட்டா நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது.

இதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், பழுதை நீக்குவதை விட முழு சக்கரமும் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் வரை bZ4X எலெக்ட்ரிக் காரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் டொயோட்டா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதாவது, டொயோட்டா BZ4X மின்சார SUV களின் உரிமையாளர்கள் ஓட்டுவதை நிறுத்துமாறு என அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் சக்கரங்கள் கழன்று விழக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தோராயமான 260 BZ4X SUVகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ரீகால் செய்யப்பட்ட வாகனங்களில், சுமார் 2,200 வாகனங்கள் ஐரோப்பாவிற்கும், 270 வட அமெரிக்காவிற்கும், 112 ஜப்பானுக்கும், 60 ஆசியாவிற்கும் சென்றதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. அவை மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்த bZ4X டொயோட்டாவின் எலக்ட்ரிக் வரிசையை வலுப்படுத்தும் திட்டங்களில் முக்கியமானதாக கருதப்பட்டது.ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து வந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் முன்கூட்டியே இதனைக் கண்டறிந்தது பாராட்டுக்குரியது.

Also see... 2035-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு எவ்வளவு இருக்கும்.? வெளியான தகவல்

டொயோட்டா 2030 ஆம் ஆண்டுக்குள் 30 EV மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது, அந்த ஆண்டில் உலகளவில் 3.5 மில்லியன் மின்சார வாகனங்களை விற்பனை செய்யும். அத்தகைய இலக்குகளை அடைவதற்காக பேட்டரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக டொயோட்டா 2 டிரில்லியன் யென் ($17.6 பில்லியன்) முதலீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Toyota

அடுத்த செய்தி