ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

4,000-க்கும் மேற்பட்ட கார்களை ரீகால் செய்த டொயோட்டா நிறுவனம்..!

4,000-க்கும் மேற்பட்ட கார்களை ரீகால் செய்த டொயோட்டா நிறுவனம்..!

அர்பன் குருசர் ஹைரைடர் கார்

அர்பன் குருசர் ஹைரைடர் கார்

Toyota Urban Cruiser compact SUV : கார்கள் விற்பனையில் முதன்மையாக விளங்கும் டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மிட் எஸ்யுவி காரை தற்போது திரும்ப பெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் டொயாட்டா நிறுவனமும் ஒன்று. சிறிய ரக கார்கள், பட்ஜெட் விலை கார்கள், சொகுசு கார்கள், எஸ்யுவி ரக கார்கள் என வாகனப் பிரியர்களின் அனைத்து தேவைகளுக்குமான கார்களை டொயோட்டா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன. இப்படி பெயர் பெற்ற டொயோட்டா கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒரு மிட் எஸ்யுவி காரை தற்போது திரும்ப பெற்று வருகிறது.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர். இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் . கடந்த 2022ம் ஆண்டு மத்தியில் தான் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விளங்குகிறது. இந்தக் காரில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை அறிந்ததால் டொயோட்டா விற்பனை செய்யப்பட்ட கார்களை திரும்ப பெற்று கோளாறை சரி செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 15 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 4,026 அர்பன் குருசர் ஹைரைடர் கார்களை டொயோட்டா நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. மேற்கண்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களின் ரியர் சீட்பெல்ட் அசெம்ப்ளியில் பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, அதனை ஆய்வு செய்து, பிரச்னையை சரி செய்வதற்காக டொயோட்டா நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், டொயோட்டா நிறுவனம் அதனை இலவசமாகவே சரி செய்து தந்து விடும். சம்பந்தப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப்கள், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், வாடிக்கையாளர்கள் டொயோட்டா டீலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதே பிரச்னைக்காக மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா காரும் ரீகால் செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. டொயோட்டாவின் அர்பன் குருசர் ஹைடரும், மாருதியின் கிராண்ட் விட்டாராவும் கிட்டத்தட்ட ஒரே கார்கள் தான். ஒரே பிளாட்பார்ம், ஸ்பேர் பார்ட்ஸ் இரண்டு கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாருதி சுசுகியும் டொயோட்டாவும் தொழில்நுட்ப ரீதியாக இணைந்து செயல்பட்டு வருவால் தங்களுக்குள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தயரிக்கப்பட்ட இரண்டு கார்ளும் தற்போது திரும்ப பெறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Automobile, Cars, Toyota