ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

EV பாகங்கள் உற்பத்தி: உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்யவும் டொயோட்டா நிறுவனம் திட்டம்.!

EV பாகங்கள் உற்பத்தி: உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்யவும் டொயோட்டா நிறுவனம் திட்டம்.!

Toyota

Toyota

Toyota Motors | எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் என்றாலே இந்தியாதான் என்று உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி டொயோட்டா நிறுவனம் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ளன. அதில் ஒன்றுதான் டொயோட்டா நிறுவனம். டொயோட்டா மோட்டார்ஸ் உலக சந்தையில் முன்னணியில் இயங்கி வந்தாலும் எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் பேட்டரி, பிளக் இன் ஹைப்ரிட் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை உள்நாட்டு சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்ய இருப்பதாக நிறுவனத்தின் அறிக்கை ஒன்று வெளியானது.

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான டொயோட்டா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 70 பில்லியன் டாலரை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. தன்னுடைய ஒட்டுமொத்த தயாரிப்புகளையும் 2030 ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் திட்டம் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருக்கும் கார் தயாரிப்பாளர்கள் தற்பொழுது கோடிக்கணக்கில் முதலீடு செய்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிப்பதிலும் டொயோட்டா ஈடுபட உள்ளது.

இந்தியாவில் இந்த கணிசமான முதலீடு, டொயோட்டாவின் லோக்கல் யூனிட், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இருக்கும் என்று கடந்த சனிக்கிழமை அன்று வெளியான அறிக்கை தெரிவித்தது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணை பிரெசிடன்ட் ஆன விக்ரம் குலாத்தி தெரிவிக்கையில், ‘சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில்நுட்ப அம்சங்களை உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நாடாக இந்தியா திகழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் என்றாலே இந்தியாதான் என்று உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி டொயோட்டா நிறுவனம் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

Also Read : எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய கட்டுக்கதைகளும்..உண்மைகளும்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சப்ளை செயினை இந்தியச் சந்தைகளுக்கு ஏற்றார் போல உருவாக்க வேண்டும் என்ற முடிவில், நிறுவனம் கிட்டத்தட்ட 48 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தது. அது மட்டுமின்றி இந்திய அரசாங்கமும், உதிரி பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, எலக்ட்ரிக் வாகனத்தை உறுதியாக கட்டமைக்க, நிறுவனத்திற்கு கணிசமான தொகையை ஊக்கத்தொகையாக வழங்குவதாக கூறப்படுகிறது.

Also Read : டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்னென்ன?

ஒரு பக்கம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பில் டொயோட்டா நிறுவனம் ஈடுபடத் தொடங்கியிருந்தாலும், தற்பொழுது நிறுவனம் ஹைபிரிட் மாடல் வாகனங்களின் உற்பத்தியில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக நாட்டில் கார்பன் உமிழ்வு மற்றும் பாரம்பரிய எரிபொருள் சார்ந்து இருக்கும் தன்மையைக் குறைப்பது தான் நோக்கம் என்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களின் உதிரி பாகங்கள் பேட்டரிகள் உற்பத்தியோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Toyota