• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புதிய வெற்றிக்காக மாருதி சுசூகி உடன் இணையும் டொயோட்டா!

புதிய வெற்றிக்காக மாருதி சுசூகி உடன் இணையும் டொயோட்டா!

டொயோட்டா - மாருதி சுசூகி

டொயோட்டா - மாருதி சுசூகி

டொயோட்டாவும் பதிலுக்கு தனது ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனத் தொழில்நுட்பத்தை இந்திய சுசூகி நிறுவனத்துக்கு வழங்க உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய மாருதி சுசூகி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம்.

பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்தை விரைவில் இந்தியாவுக்கு விற்பனைக்குக் கொண்டு வருகிறது டொயோட்டா - மாருதி சுசூகி. இரண்டு நிறுவனங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டணி முதன்முறையாக 2016-ம் ஆண்டு உருவானது.

தற்போது டொயோட்டாவில் மின்னனு தொழில்நுட்பத்தையும் மாருதியின் வாகன தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்தியாவில் வெற்றி பெறுவோம் என டொயோட்டா துணைத் தலைவர் ஷிகெகி த்ராஷி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலும் இதே கூட்டணி இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி சியஸ் செடான் மற்றும் எர்டிகா ஆகிய இரண்டு கார்களை டொயோட்டா தொழிற்சாலை வருகிற 2022 முதல் வெளியிடுகிறது. டொயோட்டாவும் பதிலுக்கு தனது ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனத் தொழில்நுட்பத்தை இந்திய சுசூகி நிறுவனத்துக்கு வழங்க உள்ளது.

மேலும் பார்க்க: அசத்தல் அப்டேட் உடன் ஹூண்டாய் சான்ட்ரோ- ஆண்டு விழா சிறப்பு வெளியீடு!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் - முழு விவரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: