வீடு தேடி வரும் கார் உதிரி பாகங்கள் - டொயோட்டா நிறுவனம் அதிரடி

டொயோட்டா

கார் உதிரி பாகங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுக்கும் புதிய திட்டத்தை டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
கொரோனாவுக்கு முன், பின் என தொழில்கள் இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மோட்டார் நிறுவனங்கள் புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஜப்பான் நிறுவனமான டொயோட்டா, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கார்களின் உதிரி பாகங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 2015ம் ஆண்டு டொயோட்டா பார்ட்ஸ் கனெக்ட் (Toyota Parts Connect’) என்ற திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யவும், கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்து மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்கள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த திட்டத்தின் நீட்சியாக, வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் ஸ்பேர் பார்ட்ஸ்களை டோர் டெலிவரி செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் துணை தலைவர்களுள் ஒருவரான நவீன் சோனி, வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குவதில் புதிய எல்லையை டொயோட்டா நிறுவனம் அடைந்துளது.

தாங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை அவர்களின் இடத்துக்கு கொண்டு சென்று கொடுக்க இருக்கிறோம் எனத் தெரிவித்தார். எளிதில் அணுகக்கூடிய, வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அந்தவகையில், டொயோட்டா ஸ்பேர் பார்ட்ஸ்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக இனி கிடைக்கும் என்பதால், எங்கள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம் என நவீன் சோனி கூறியுள்ளார்.

Also read : அட்டகாசமான கிளாசிக் லுக்..மெர்சிடிஸ் பென்ஸ் உள்ள இப்படி தான் இருக்குமா?

இப்போதைக்கு இருக்கும் கால சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டொயோட்டா நிறுவனம் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கும் ஒருவிதமான மனஅழுத்தம் அல்லது பயத்தை தணிக்கும் என நம்புகிறோம் எனக் அவர் தெரிவித்துள்ளார். டொயோட்டாவின் டோர் டெலிவரி திட்டத்தில் காருக்கு தேவையான உதிரி பாகங்கள், எஞ்சின் ஆயில், டையர், பேட்டரி உள்ளிட்டவையும் கிடைக்கும். தற்போது நாடு முழுவதும் உள்ள 12 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read: ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ராயல் என்ஃபீல்டு-ன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம் ?

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகரங்களிலும் இந்த சேவை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தங்களுடைய கார்களுக்கு டொயோட்டா நிறுவனம் அட்டகாசமான ஆஃபர்களையும் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டொயோட்டா யாரீஸ் கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்க தள்ளுபடியும், 25 ஆயிரம் ரூபாய் போனஸூம் கொடுக்கப்பட்டுள்ளது. டொயோட்டா கிளான்ஸ் கார்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் ரொக்க தள்ளுபடியும், 8 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: