ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

எப்போது அறிமுகமாகிறது Toyota-வின் Hilux பிக்-அப் டிரக் - வெளியான விவரங்கள்!

எப்போது அறிமுகமாகிறது Toyota-வின் Hilux பிக்-அப் டிரக் - வெளியான விவரங்கள்!

Toyota Hilux pick up

Toyota Hilux pick up

டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோ கிரிஸ்டாவிற்கு அடுத்து IMV பிளாட்ஃபார்மில் இருந்து வரும் மூன்றாவது மாடலாக Hilux இருக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. டொயோட்டா இந்தியாவில் Hilux பிக்கப் டிரக்கை அறிமுகப்படுத்த தீவிரமாக பரிசீலித்து வருவதாக முன்பே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக டொயோட்டா Hilux-ஐ வரும் ஜனவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஜனவரி 2022-ன் இரண்டாம் பாதியில் டொயோட்டா இந்தியா நிறுவனம் தனதுToyota Hilux lifestyle pick-up வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. ஜப்பானிய கார் தயாரிப்பாளரான டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோ கிரிஸ்டாவிற்கு அடுத்து IMV பிளாட்ஃபார்மில் இருந்து வரும் மூன்றாவது மாடலாக Hilux இருக்கும். மேலும் இந்த வாகனங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் காம்போனென்ட்ஸ்களையும் Hilux பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்லிஃப்ட்டட் (facelifted) செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனரில் உள்ள அதே 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-டீசலை டொயோட்டாவின் இந்தியா-ஸ்பெக் Hilux-ம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் Hilux மேற்கூறிய 2 மாடல்களையும் விட கணிசமாக நீளமாக இருக்கும். ஏனெனில் இது கிட்டத்தட்ட 5.3m நீளம் மற்றும் 3m-க்கும் அதிகமான வீல்பேஸ் கொண்டுள்ளது. கூடுதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள Hilux பிக்அப் டிரக்கானது, ஒரு பெரிய அறுகோண முன் க்ரில், எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸ், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்ஸ்ளுடன் ஒரு தனித்துவ வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது.

Also read:  2-வது உற்பத்தி ஆலையையும் ஓசூரில் அமைக்க உள்ள ஏதெர் நிறுவனம்.. உற்பத்தியை 3 மடங்கு அதிகரிக்கிறது..

தவிர ஃப்ளேர்டு வீல்ஸ், பாடி கிளாடிங் மற்றும் சைட் ஸ்டெப் ஆகியவை இந்த Hilux பிக்கப் டிரக்கிற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கின்றன. பெரும்பாலான பிக்கப் டிரக்குகளைப் போலவே இதன் பின்புற ஸ்டைலிங் மிகவும் எளிமையானது என்றாலும் செதுக்கப்பட்டது போன்ற வடிவமைப்பை கொண்ட டெயில்-லைட்ஸ்கள் இவ்வாகனத்தை தனித்து காட்டுகிறது. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, நாம் Hilux-ன் டபுள்-கேப் வெர்ஷனை (double-cab version)பெறுவோம்.

ஆனால் டொயோட்டா வணிக வாகனப் பிரிவுக்காக ஒரு சிங்கிள்-கேப் வெர்ஷனை (single-cab version) அறிமுகப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனரில் இருந்து, செலவைச் சேமிக்க உதவும் வகையில், Hilux-லில் பல இன்டீரியர் காம்போனென்ட்ஸ்களை நிறுவனம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:  இந்தியாவில் அறிமுகமானது Harley-Davidson-ன் புதிய Sportster S - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Hilux-ன் எஞ்சின் ஆப்ஷன்களை பற்றி எந்த தெளிவும் இல்லை என்றாலும், Hilux இன்னோவாவின் 2.4-லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டு வெளிவர கூடும். இருப்பினும், டாப்-எண்ட் Hilux மாடலில் டொயோட்டா ஃபார்ச்சூனரின் 2.8-லிட்டர் டீசல் எஞ்சினை (201 bhp மற்றும் 500 Nm) பயன்படுத்த கூடும். இன்னோவா கிரிஸ்டாவிடல் இருக்கும் அம்சங்களான 8 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஏசி, அம்பியன்ட் லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், புஷ்-பட்டன் ஸ்டாப்/ஸ்டார்ட் போன்றவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் Hilux பிக்கப் டிரக்கிலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Arun
First published:

Tags: Automobile, Toyota