• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விற்பனையில் முதலிடம் பிடித்த டொயோட்டா பார்ச்சூனர் - பிப்ரவரி வரை 2,053 யூனிட்டுகள் விற்றுத்தீர்த்தது!

விற்பனையில் முதலிடம் பிடித்த டொயோட்டா பார்ச்சூனர் - பிப்ரவரி வரை 2,053 யூனிட்டுகள் விற்றுத்தீர்த்தது!

டொயோட்டா பார்ச்சூனர்

டொயோட்டா பார்ச்சூனர்

எஸ்யூவி பிரிவில் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் இந்த வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    2021ம் ஆண்டு இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்ட பிரீமியம் எஸ்யூவி-க்கள் மற்ற மாடல்களை விட சிறந்த விற்பனை புள்ளிவிவரங்களை பெற்றுள்ளன. எஸ்யூவி பிரிவில் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் இந்த வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது புதிய மாடல்களின் நிலையான வருகையைக் உறுதி செய்துள்ளன. இருப்பினும் ஜப்பானிய மாடல் விற்பனை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் விற்பனை புள்ளிவிவரங்கள் ஒருதலைப்பட்சமாகத் தெரிவதாக சில கருத்துக்களும் எழுந்துள்ளன.

    சமீபத்தில் வெளியான பிப்ரவரி மாதம் விற்பனை புள்ளிவிவரங்களில், டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) வாகனம் முதலிடத்தில் உள்ளது. எட்டமுடியா விற்பனை புள்ளிகளைக் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் பார்ச்சூனர் எஸ்யூவி சுமார் 2,053 யூனிட்டுகள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. பார்ச்சூனர், பல தலைமுறைகளாக, ஒரு வலுவான பிராண்ட் இமேஜை மக்களிடையே உருவாக்கியுள்ளதுடன் அதன் முரட்டுத்தனமான அமைப்பு, சக்திவாய்ந்த இயந்திரம், எந்த மாதிரியான சாலையிலும் திறன்களுடன் ஆதிக்கம் செலுத்தும் இருப்பைக் கொண்டுள்ளது.

    டொயோட்டாவின் விற்பனைக்குப் பிந்தைய அனுபவத்தின் அற்புதமான பதிவு மற்றும் அதனுடன் ஒரு அற்புதமான மறுவிற்பனை மதிப்பு ஆகியவை ஃபார்ச்சூனருக்கு இந்த பிரிவில் அதன் தலைமை இடத்தை உறுதிப்படுத்த உதவியது. பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றிருந்த மாடல் ஃபோர்டு எண்டெவர் (Ford Endeavour), இது பல ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் பிரீமியம் எஸ்யூவி ஆகும். இது பார்ச்சூனரின் அதே விற்பனை வெற்றியை அனுபவிக்கவில்லை என்றாலும், அதன் சமீபத்திய மறு வடிவமைப்பின் அடிப்படையில், எண்டெவர் வலுவான திறன்களைக் கொண்ட பிரீமியம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த எஸ்யூவியாக உருவெடுத்தது.

    பிப்ரவரி 2021-ல் நடந்த விற்பனையின் படி, அமெரிக்க வாகன உற்பத்தியாளரின் இந்தியன் எஸ்யூவி 801 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 44% வளர்ச்சியை பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய சந்தைக்கு புதிதாக நுழைந்த எம்.ஜி. குளோஸ்டர் (MG Gloster) விற்பனை பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. எம்.ஜி.யின் மிகப்பெரிய எஸ்யுவி மாடல் கடந்த மாதம் வரை 463 யூனிட்டுகளை இந்திய சந்தையில் விற்றுள்ளது.

    Also read... மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை அமோகம் - வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்விப்ட்!

    ஒரு நிலையான விற்பனை மூலோபாயத்துடன், நிறுவனம் வரும் மாதங்களில் எம்.ஜி. குளோஸ்டர் யூனிட்டுகளின் வெளியீட்டில் இருக்கும் இடைவெளியை விரைவில் தீர்க்கும் என தெரிவித்துள்ளது. எஸ்யூவி பிரிவுகளின் பிரீமியம் வரம்பின் கிராஸ்ஓவர் மாடல்களில், ஹூண்டாயின் டக்சன் (Hyundai’s Tucson) வெறும் 152 யூனிட்களை விற்றது.

    இதற்கடுத்ததாக, ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டிருந்த உள்நாட்டு வாகன உற்பத்தியாளர் மஹிந்திரா அல்துராஸ் ஜி 4 (Mahindra Alturas G4), வெறும் 36 யூனிட்டுகளை விற்று ஆறாவது இடத்திற்கு சரிந்தது. இந்த பட்டியலில் கடைசியாக மற்றொரு ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) இருந்தது. இது கடந்த மாதம் அனுப்பப்பட்ட ஒரு தனி அலகு மட்டுமே விற்பனை செய்துள்ளது. நிறுவனம் அதன் நொய்டா ஆலையை மூடியதும், அதன் முழுமையான நாக் டவுன் (சி.கே.டி) மாடல்களை நிறுத்தியதும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: