புக்கிங்கில் அசத்தும் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர்! - ஒரு மாதத்தில் 5 ஆயிரம் கார்கள் புக்கிங்!

புக்கிங்கில் அசத்தும் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர்! - ஒரு மாதத்தில் 5 ஆயிரம் கார்கள் புக்கிங்!

அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் முடிவதற்குள்ளாக டொயோட்டா பார்சூனர் மற்றும் லெஜண்டர் கார்கள் 5 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் முடிவதற்குள்ளாக டொயோட்டா பார்சூனர் மற்றும் லெஜண்டர் கார்கள் 5 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

  • Share this:
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் மாடல் கார்களை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற இந்த மாடலின் அப்டேட் வெர்சன் பார்ச்சூனர் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர்  கார்கள் ஜனவரி 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு புதிய அம்சங்களுடன் வரவுள்ள இந்த காருக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பார்ச்சூனர் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் எஸ்.யூ,வி மாடல் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு மாதம் நிறைவடைவதற்குள்ளாக இரு கார்களுக்கும் 5 ஆயிரத்துக்கும் மேலான முன்பதிவுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக கூறியுள்ளது.

நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள எஸ்.யூ.வி மாடல் வெர்சன் கார்களில், டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் 53 விழுக்காடு இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் நவீன்சோனி, டொயோட்டா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் காட்டும் அன்பு தங்களை நெகிழ வைப்பதாக கூறியுள்ளார். பார்ச்சூனர் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கருத்துகளும் முன்பதிவுகளும், அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக தெரிவித்துள்ள அவர், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப குறித்த நேரத்தில் முன்பதிவு கார்களை டெலிவரி செய்வதற்காக தாங்கள் உழைத்து வருவதாக கூறியுள்ளார். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு புதிய இரு மாடல்களும் உருவாக்கப்பட்டதாகவும் விரைவில் புதிய காரின் அனுபவத்தை அவர்கள் பெறுவார்கள் என்றும் நவீன் சோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எஸ்.யூ,வி மாடல்களில் பார்ச்சூனர் கார்கள் தற்போது வரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சமாக 29.98 லட்ச ரூபாயும், டாப் எண்ட் வேரியண்ட் லெஜண்டர் விலை 37.58 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சின்களின் அடிப்படையில் 2 வேரியண்டுகளில் புதிய பார்ச்சூனர் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் கார்கள் கிடைக்கின்றன. 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபார்ச்சூனர் கார் 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோன்று, 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் ஃபார்ச்சூனர் கார்கள் 164 பிஎச்பியையும், 245 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இவையிரண்டும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேகக்கட்டுப்பாட்டு தேர்விலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன
Published by:Ram Sankar
First published: