Home /News /automobile /

புதிய எலக்ட்ரிக் பிக்கப் டிரக் – EV பிரிவில் டொயோட்டாவின் அறிமுகம்

புதிய எலக்ட்ரிக் பிக்கப் டிரக் – EV பிரிவில் டொயோட்டாவின் அறிமுகம்

புதிய எலக்ட்ரிக் பிக்கப் டிரக்

புதிய எலக்ட்ரிக் பிக்கப் டிரக்

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் 16 பேட்டரிகள் இயக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளது. சிங்கிள் யூசர் லைட்-வெயிட் மாடல் முதல் கனரக வாகனங்கள் வரை பல்வேறு பிரிவுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில் புதிய பிக்கப் டிரக்கை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது, டொயோட்டா நிறுவனம்.

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் 16 பேட்டரிகள் இயக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‌‌டொயோட்டா நிறுவனம் தன்னுடைய லெக்சஸ் பிராண்டு முழுவதையும் எலெக்ட்ரிக் வாகனப்பிரிவாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.சில நாட்களுக்கு முன், டொயோட்டா நிறுவனம் தங்களின் பேட்டரியால் இயக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் ஸ்ட்ரேட்டஜிகளைப் பற்றி ஒரு நிகழ்வை நடத்தியது.

பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், டொயோட்டா தனது பிக்கப் டிரக் பற்றியும் தெரிவித்தது. டொயோட்டா நிறுவனம், ஹைட்ரோஜன் எரிபொருள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் உற்பத்தியில் கணிசமான தொகையை முதலீடு செய்ய பெயர் பெற்றது. அந்த வகையில், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, தொழில்நுட்ப வசதி மேம்பட்டு இருக்கும் வாகனங்களின் உற்பத்தி திட்டத்திற்கு டொயோட்டா நிறுவனம் $70 பில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளது.

ALSO READ |  இமாலயன் ஏடிவிக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கியது பெனெல்லி டிஆர்கே 251.. விலை விவரம்!

டிரக்குகளைப் பொருத்தவரை இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் டிரக்குகளை எலக்ட்ரிக் வாகனங்களை இதுவரை தயாரிக்க முன்வரவில்லை. டொயோட்டா நிறுவனம்தான் முதல் முறையாக எலக்ட்ரிக் பிக்கப் டிரக்குகளை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்காவில் எலக்ட்ரிக் எஸ்யுவிக்கு சமமாக எலக்ட்ரிக் பிக்கப் டிரக்குகளுக்கும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கிறது. அதே போல இந்தியாவிலும் தற்போது துவங்கியிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் புதிய ட்ரெண்டை உருவாக்கும் என்று டொயோட்டா நிறுவனம் எலெக்ட் டிரக் உற்பத்தியை தொடங்கவிருக்கிறது.ஆனால் வாகனத்தின் ஸ்பெசிஃபிகேஷன் பற்றிய எந்த தகவலையும் இந்த நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

டொயோட்டா நிறுவனம் டிரக்கின் மாடல் புகைப்படங்களை வெளியிட்டது. தோற்றத்தில் ஒரு சில வித்தியாசங்களைத் தவிர்த்து டொயோட்டாவின் டகோமா, மாடலைப் போலவே உள்ளது. புதிய EV டிரக்கில் புத்தம் புதிய ஹெட் லைட் டிசைனுடன் டூயல் டோன் அப்ஷனுடன் வருகிறது. அமெரிக்காவில், டகோமா முன்னணியில் வகிக்கும் மிட்-சைஸ் பிக்கப் டிரக் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  இந்தியாவில் சிறந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

புதிய EV டிரக்கில் புத்தம் புதிய ஏற்கனவே பிக்கப் டிரக் உற்பத்தி தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அல்லது 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வாகனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 2030 ஆண்டுக்குள் 30 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைப்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Toyota

அடுத்த செய்தி