ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Toyota: டொயோட்டா அறிவித்துள்ள அட்டகாசமான சலுகைகள்: நீங்கள் வாங்கும் வாகனங்களுக்கு ரூ.75,000 தள்ளுபடி பெறலாம்!

Toyota: டொயோட்டா அறிவித்துள்ள அட்டகாசமான சலுகைகள்: நீங்கள் வாங்கும் வாகனங்களுக்கு ரூ.75,000 தள்ளுபடி பெறலாம்!

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டா இந்தியா, தங்களது வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஜூன் மாதம் 30ம் தேதி வரை பல்வேறு மாடல்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு இன்னும் முடிவடையாத நிலையில், இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 66 சதவீதம் (MoM) குறைந்துள்ளது என்று வாகனத் தொழில்துறை அமைப்பின் சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM) கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். சியாம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் விற்கப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்கள் எண்ணிக்கை 88,045 யூனிட்டாக இருந்தது.

இது ஏப்ரல் 2021 இல் 261,633 ஆகவும், 2019 மே மாதத்தில் 226,975 யூனிட்டுகளாகவும் இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தளர்த்தப்படுவதால், வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க மற்றும் வாகன சந்தையில் உள்ள ஸ்டாக்குகளை கிளியர் செய்வதற்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் டொயோட்டா இந்தியா, தங்களது வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஜூன் மாதம் 30ம் தேதி வரை பல்வேறு மாடல்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜப்பானிய பிராண்ட் இந்த மாத இறுதி வரை அதன் வாகனங்களுக்கு ரொக்க தள்ளுபடிகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி பெறலாம். சமீபத்தில் வெளியான கார்வேல் அறிக்கையில், டொயோட்டாவின் எந்தெந்த வாகனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ்: (Toyota Yaris)

ஐந்து இருக்கைகள் கொண்ட செடான் அதிகபட்ச நன்மைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.50,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.25,000 பரிமாற்ற போனஸ் ஆகியவை அடங்கும். இந்த காரின் விலை ரூ.9.17 லட்சத்தில் தொடங்கி ரூ.14.61 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா கிளான்ஸா: (Toyota Glanza)

டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா வாகனத்தை வாங்குபவர்கள் ரூ.20,000 வரை சலுகைகளைப் பெறலாம். இதில் ரூ .8,000 ரொக்க தள்ளுபடி; பரிமாற்ற போனஸ் ரூ .8,000 மற்றும் கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 அடங்கும். இந்த நன்மைகள் அடங்கிய ஹேட்ச்பேக் இரண்டு பிஎஸ்-வி இணக்கமான பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களில் கிடைக்கிறது மற்றும் விலை ரூ.8.27 லட்சத்தில் தொடங்கி ரூ.10.42 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், டெல்லி) இருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர்: (Toyota Urban Cruiser)

இந்த வாகனத்திற்கு ரொக்க தள்ளுபடி இல்லை என்றாலும், இதனை வாங்குபவருக்கு மொத்த சலுகைகள் அடிப்படையில் பரிமாற்ற போனஸ் ரூ.20,000 கிடைக்கும். ஹேட்ச்பேக்கின் விலை ரூ.9.68 லட்சத்தில் தொடங்கி ரூ.13.19 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கும்.

இந்த தள்ளுபடி விகிதங்கள் மற்றும் சலுகைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் மற்றும் வழங்கப்படும் தள்ளுபடிகள் கார் விற்பனையாளர்களின் விருப்பப்படி இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கிடையில், டொயோட்டாவின் இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் மற்றும் வெல்ஃபைர் மாடல்களை வாங்குபவர்களுக்கு எந்த தள்ளுபடியும் கிடைக்காது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Toyota, Toyota Glanza