Home /News /automobile /

விழாக்கால சலுகையாக ₹ 2.2 லட்சம் தள்ளுபடி...டொயோட்டா அதிரடி ஆஃபர்!

விழாக்கால சலுகையாக ₹ 2.2 லட்சம் தள்ளுபடி...டொயோட்டா அதிரடி ஆஃபர்!

டொயோட்டா

டொயோட்டா

விலைச் சலுகை உடன் உபகரணங்களும் குறிப்பிட்ட கார்களுக்கு ஆஃபரில் வழங்கப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
டொயோட்டாவின் கார்களுக்கு விழாக்கால சலுகையாக 2.2 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில் பல கார் உற்பத்தி நிறுவனங்களும் விலைத் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இந்தியாவின் நான்காம் முன்னனி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்களைவிட முன்னிலைக்கு வளர்ந்துள்ளது.

டொயோட்டா விழாக்கால சலுகையாக கொரோல்லா அல்டிஸ் காருக்கு 2.20 லட்சம் ரூபாய் வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது. ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாக சந்தையில் உள்ளது கொரோல்லா அல்டிஸ்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஃபோர்டு எண்டவர், மஹிந்திரா அல்துராஸ் G4 மற்றும் ஐசுஸு MU-X ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது ஃபார்ச்சூனர். குடும்பங்களுக்கான காராக அடையாளப்படுத்தப்படும் இன்னோவா க்ரிஸ்டா காருக்கு 1.05 லட்சம் ரூபாய் சலுகை உள்ளது.

முரட்டுத்தனமான கார் என்றழைக்கப்படும் க்ராஸ் காருக்கு 58 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. இடியோஸ் மற்றும் லிவா ஆகிய இரண்டு கார்களுக்கும் 38 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. விலைச் சலுகை உடன் உபகரணங்களும் குறிப்பிட்ட கார்களுக்கு ஆஃபரில் வழங்கப்படுகின்றன.

மேலும் பார்க்க: 11 நாளில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு... மாருதி சுசூகி S-Presso காருக்கு நல்ல வரவேற்பு!

குழந்தைகள் செல்போன், டிவி பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்தலாம் ?
Published by:Rahini M
First published:

Tags: Toyota

அடுத்த செய்தி