வரும் நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான கார் உற்பத்தி இலக்கை ஏற்கனவே திட்டமிட்ட இலக்கிலிருந்து 15% குறைக்க ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பாளரான டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் முடிவு செய்து இருக்கிறது. முன்னதாக டொயோட்டா நிறுவனம் நவம்பரில் (அடுத்த மாதம்) சுமார் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் கார்களை தயாரிக்க இலக்கு கொண்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை 8,50,000 முதல் 9,00,000 கார் யூனிட்டுகளாக குறைத்து கொண்டுள்ளதாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான அறிக்கையில், எங்கள் நிறுவனம் இன்னும் சில பார்ட்ஸ்களில் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், இதன் காரணமாக உற்பத்தி பற்றாக்குறையை தவிர்க்க முடியவில்லை என்றும் டொயோட்டா நிறுவனம் கோடிட்டு காட்டி இருக்கிறது.
தேவையான செமிகன்டக்டர் சிப் (semiconductor chip) இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஜப்பானில் சுமார் 50,000 யூனிட்களும், சீனாவில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் பல காரணிகளால் வெளிநாடுகளில் 50,000 யூனிட்களின் தயாரிப்பிலும் பாதிப்புகள் ஏற்படும் என்று டொயாட்டோ கூறி இருக்கிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்கிழக்கு ஆசியாவில் (மலேசியா மற்றும் வியட்நாம்) கோவிட் -19 பாதிப்புகள் திடீரென அதிகரித்ததால் டொயோட்டா அதன் உற்பத்தி திறனை மொத்தமாக 3% (3 லட்சம்) வரை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Also Read:
தோனி குறித்து சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா வெளியிட்ட ரகசியம்!
இது semiconductor-களுக்கான அணுகலையும் பாதித்தது. இடையிடையே உற்பத்தி குறைக்கப்பட்டாலும் கூட, மார்ச் 21, 2022-ல் முடிவடைய உள்ள12 மாதங்களில் ஏற்கனவே 3% குறைக்கப்பட வாகன உற்பத்தி இலக்கான 9 மில்லியனை எட்ட வேண்டும் என்ற முழு ஆண்டு உற்பத்தி இலக்கில் மாற்றம் ஏதும் இல்லையென்றும், இந்த உற்பத்தி இலக்கை நிறைவு செய்யும் வகையில் வரும் டிசம்பர் முதல் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் டொயோட்டா நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
இதனிடையே சீனாவின் தற்போதைய மின் பற்றாக்குறை பாகங்கள் பற்றாக்குறை சூழலை இன்னும் கடினமாக்க கூடும் என்பதை டொயோட்டா உணர்ந்துள்ளதாக அதன் அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். எனவே அறிக்கையில் கூறியுள்ளபடி வரும் டிசம்பருக்கு பிறகு உற்பத்தி அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியுமா என்பதில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read:
வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம்.. 4 பேர் பலி..
அதே போல செமிகன்டக்டர் சிப் பற்றாக்குறை இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்ப்பதால், சாத்தியமான இடங்களில் அதற்கு மாற்றுகளை பயன்படுத்துவதை கருத்தில் கொள்வோம். இதன் மூலம் பாகங்களில் பற்றாக்குறை இருந்தாலும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த முயற்சிப்போம் என்றும் டொயாட்டோ நிறுவனம் கூறி இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.