• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • யாரிஸ் செடானுக்கு மாற்றாக அறிமுகம் ஆகும் டொயோட்டா பெல்டா பற்றிய புதிய தகவல்கள்!

யாரிஸ் செடானுக்கு மாற்றாக அறிமுகம் ஆகும் டொயோட்டா பெல்டா பற்றிய புதிய தகவல்கள்!

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டா செடான், மாருதி சுசுகி செடானான சியாஸ் காரின் நகல் என்று பரவலாக கூறப்படுவது உண்மைதான்.

  • Share this:
விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டா பெல்டா செடான், மாருதி சுசுகி சியாஸ் போலவே இருக்கிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த புதிய செடான் பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே.,

டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் செடான் விற்பனை இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டதால், அதற்கான மாற்றாக செடான் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானியா கார் தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம், யாரிஸ் செடான் மாடலுக்கு பதிலாக புதிதாக பெல்டா என்றா செடானை அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற தகவல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. தற்போது இந்திய கார் சந்தையில் ஏற்கனவே வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் மாருதி சியாஸ் செடானின் நகலாக மற்றொரு செடானை வடிவமைக்க டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு, அதன் படி விரைவில் பெல்டாவை லான்ச் செய்கிறது.

டொயோட்டா பெல்டா, இந்த நிறுவனத்தின் முக்கியமான வாகனமாக இருக்கும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதையொட்டி, இந்த கார் எப்படி இருக்கும், இதன் அம்சங்கள் என்ன என்பதை பற்றிய தகவல்கள் அவ்வப்போது கசிந்தன. தற்போது டொயோட்டா டெல்டா பற்றிய வெளியான கூடுதல் விவரங்கள் இங்கே.

புதிய செடானின் அதிகாரபூர்வமான பெயர் – டொயோட்டா பெல்டா (Toyota Belta). இந்த புதிய செடானின் பெயர் பெல்டாவாக இருக்கலாம் என்று பல்வேறு தரப்பில் செய்தி வெளியானது. இந்தப் பெயரை டாடா நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே டிரேட்மார்க் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய செடானின் பெயர் ‘டொயோட்டா பெல்டா’ (Toyota Belta) என்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சியாசின் கிளாசிக் நகல் தான் டொயோட்டா பெல்டா :

டொயோட்டா செடான், மாருதி சுசுகி செடானான சியாஸ் காரின் நகல் என்று பரவலாக கூறப்படுவது உண்மைதான். கிரில், ஹெட்லேம்ப்கள், பம்பர், அலாய் வீல்கள் மற்றும் டெயில் விளக்குகள் அனைத்தும் மாருதி சியாஸில் காணப்படுவது போலவே செடானிலும் உள்ளது. இந்த செடானில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க வில்லை என்றாலும், தோற்றத்தில், வெளிப்புற மற்றும் உட்புற அலங்காரங்களில் சிறிய சிறிய மாற்றங்களாவது நிச்சயமாக இருக்கும்.

உட்புற மற்றும் வெளிப்புற தோற்றம் :

இந்த காரின் இன்டீரியர் கேபின் சியாஸ் செடான் கேபின் போலவே பெரிதாக காணப்படுகிறது. டொயோட்டா பேட்ஜ் கொண்ட சுசுகி சியாசின் தோற்றம் டொயோட்டா பெல்டாவின் வெளிப்புறத் தோற்றம் அமைந்துள்ளது. ஆனாலும் டொயோட்டாவுக்கென்றே உரிய குறிப்பிட்ட சில முத்திரைகளை இன்டீரியர் மாற்றங்களாக எதிர்பார்க்கலாம்.

Also read... 2023 முதல் போக்குவரத்து வரலாற்றையே மாற்றப்போகும் பறக்கும் கார்!

இன்ஜின் மற்றும் பாகங்கள் :

மாருதி சியாசில் இருக்கும் 105PS 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பெல்டாவிலும் காணப்படும். அதே போல, 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு AT டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டி வாகனங்கள் :

டொயோட்டா சியாஸ் ஏற்கனவே வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஹோண்டா சிட்டி மாருதி சுசூகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: