புத்தம் புதிய 2021 டொயோட்டா ஃபார்சுனர் கார் விற்பனைக்கு அறிமுகம் - ஸ்பெஷல் அம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்கள்

புத்தம் புதிய 2021 டொயோட்டா ஃபார்சுனர் கார் விற்பனைக்கு அறிமுகம் - ஸ்பெஷல் அம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்கள்

முந்தைய ஃபார்சுனரில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே இடம்பெற்ற நிலையில் புத்தம் புதிய 2021 ஃபார்சுனரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

முந்தைய ஃபார்சுனரில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே இடம்பெற்ற நிலையில் புத்தம் புதிய 2021 ஃபார்சுனரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
டொயோட்டா நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக திகழும் ஃபார்சுனர் 2016ல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவாகவே வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்த இக்காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பும் ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே எழுந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர்
தற்போது முதல் முறையாக மாறுதலை இக்கார் சந்தித்துள்ளது. புத்தம் புதிய தோற்றம் மட்டுமில்லாமல் உட்புறத்திலும் பல மாறுதல்களுடன் ஃபார்சுனர் தற்போது அறிமுகமாகியுள்ளது. ரூ.29.98 லட்சம் தொடங்கி ரூ.37.58 லட்சம் வரையிலான விலையில் பல்வேறு வேரியண்ட்கள் இதில் கிடைக்கின்றன.

வெளிப்புற மாறுதல்கள்:



2021 ஃபார்சுனரின் முகப்பு முற்றிலும் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் எரியும் எல்ஈடி லைட்டுகளுடன் கூடிய ரீடிசைன் செய்யப்பட்ட
எல்ஈடி ஹெட்லைட்டுகள், மேம்படுத்தப்பட்ட க்ரில் மற்றும் பம்பர் ஆகியன முன்புற தோற்றத்தை கச்சிதமாக மாற்றியுள்ளன. இதே போல பின்புறத்திலும் எல்ஈடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 18 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புற மாறுதல்கள்:

புதிய ஃபார்சுனரில் வெளிப்புற மாறுதல்கள் அளவுக்கு உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் கூட ஒரு முக்கியமான மாற்றமாக இருப்பது, இதில் இடம்பெற்றுள்ள 8.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம். இது ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்டுடன் கூடியது. கனெக்டெட் கார் அம்சம் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.

இதன் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டரில் சிறிய மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் மற்றும் முன்புற பாசஞ்சர் சீட் ஆகியவை 8 வழியில் பவர் அட்ஜஸ்டபிளாக உள்ளது. 11 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், முன்புற பார்க்கிங் சென்சார்கள், இரண்டு இண்டீரியர் கலர் ஸ்கீம் ஆகியன முக்கிய மாற்றங்களாக உள்ளன.

டொயோட்டா ஃபார்சுனர் லிகெண்டர்:



ஃபார்சுனர் காரின் டாப் மாடலாக லிகெண்டர் வேரியண்ட்
வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்டியர் தோற்றம் கொண்ட லிகெண்டர்
வேரியண்டின் விலை ரூ. 37.58 லட்சமாகும். இதன் முகப்பு முற்றிலும் வேறு தோற்றத்தில் உள்ளது. ஸ்பிலிட் க்ரில், பம்பர், முகப்பு லைட்டுகள் என அனைத்தும் தனித்துவமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புரெஜெக்டர் ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக லிகெண்டர் வேரியண்ட் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும். கருப்பு நிறத்திலான ரூஃப் பெயிண்டிங் அதில் இடம்பெறும்.

எஞ்சின் :

2021 ஃபார்சுனர் 2-7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 166 ஹெச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இதே போல இதன் டீசல் எஞ்சினானது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் அதிகபட்சமாக 204 ஹெச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது.

முந்தைய ஃபார்சுனரில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே இடம்பெற்ற
நிலையில் புத்தம் புதிய 2021 ஃபார்சுனரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம்
இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்டான லிகெண்டரில் 4 வீல் ட்ரைவ் சிஸ்டம் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: