• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Toutche நிறுவனத்தின் அட்டகாசமான அறிமுகம் - ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள் Heileo H100!

Toutche நிறுவனத்தின் அட்டகாசமான அறிமுகம் - ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள் Heileo H100!

ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள்

ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள்

Toutche நிறுவனம் இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் ஆரம்ப விலையை ரூ.48,900 என்று நிர்ணயித்துள்ளது.

  • Share this:
பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனமான Toutche, Heileo H100 என்ற அற்புதமான ஹைப்ரிட் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Toutche Heileo H100, 7 ஸ்பீட் கியர், 5 லெவல் பவர் அசிஸ்ட் மற்றும் நீக்கக்கூடிய Li-ion பேட்டரியுடன் வருகிறது. Toutche தனது புதிய ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள், Heileo H100 என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதி நவீன மாடல் சைக்கிளில், நகர போக்குவரத்தில் காற்றைப் போல பயணிக்கலாம்.

Toutche நிறுவனம் இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் ஆரம்ப விலையை ரூ.48,900 என்று நிர்ணயித்துள்ளது. இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்த புதிய மாடலோடு, ஏற்கனவே சந்தையில் அறிமுகமான இதன் முந்தைய மாடல்கள் M100, M200, மற்றும் H200 ஆகியவற்றின் புக்கிங்கை தன் வலைதளத்தில் தொடங்கியுள்ளது. Heileo H100 இரண்டு வண்ணங்களில் வருகிறது – ஸ்ப்ரிங் கிரீன் மற்றும் ஃபெட்டா வைட். வேடிக்கை, விளையாட்டு மற்றும் சாகசத்துக்காக சைக்கிள் ஓட்டுபவர்களை, இளைஞர்களை மற்றும் தினசரி பயன்படுத்துபவர்களை குறி வைத்து இந்த ஹைப்ரிட் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சைக்கிள்கள், 345 மற்றும் 460 வாட்ஸ் சக்தி கட்டமைப்பில் 6061 அலுமினிய அலாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, Heileo H100, சந்தையிலேயே மிகவும் எடைகுறைவான ஹைப்ரிட் சைக்கிள் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இன்டலிஜென்ட் கட்டுப்பாடு, பேனசோனிக் செல்களால் ஆனா நீக்கக்கூடிய Li-ion பேட்டரி, மற்றும் 250 வாட்ஸ் திறன் கொண்ட ரியர் BLDC மோட்டார், ஆகியவை இந்த சைக்கிளின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள், மலைப்பாங்கான பிரதேசங்களிலும் சுலபமாக ஓட்டவும், சிறந்த அனுபவத்தையும் தரும்.

Heileo வின் பிற மாடல்களைப் போலவே, H100 மாடலிலும் இரண்டு வரம்புகள் உள்ளன – ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ மற்றும் 80 கிமீ செல்லும் தேர்வுகள் உள்ளன. Heileo வின் இந்த பைக், மூன்று வகையான பயன்முறைகளோடு வருகிறது. இதனை நீங்கள் ஒரு சாதாரண சைக்கிள் போல பயன்படுத்தலாம் (7-ஸ்பீட் ஷிமானோ கியர்கள்). அல்லது தேவைப்படும் போது எலக்ட்ரிக் பயன்முறையில் மாற்றிக்கொள்ளலாம் (பெடல்-உதவி அல்லது த்ராட்டில்). இந்தப் பயன்முறையில் 5-நிலைகள் வரை பவர் அசிஸ்ட் அம்சம் மற்றும் வலதுபுற ஹேண்டில் திராட்டில் இருக்கின்றன.

Also read... கார்களுக்கு Maruti Suzuki அறிவித்துள்ள ஜூலை மாத Offer விவரங்கள்...

Toutche வின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ரகு கெரகட்டி இந்த ஹைப்ரிட் சைக்கிள் அறிமுகம் பற்றிக் கூறுகையில், “இந்த புத்தம் புதிய H100 Heileo பைக் ஸ்டைல் மற்றும் ஆற்றல் நிரம்பியுள்ளது. சமீபத்தில் சில மாதங்களாக இ-பைக்குகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த ஹைப்ரிட் மாடலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. தினசரி பயன்பாடோ அல்லது சாகசமோ, Toutche உங்கள் தேவையை நிறைவேற்றும்” என்றார்.

இந்த Heileo பைக்குகள், மைசூரில் உள்ள Toutche நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை பைக்குகளுக்கு, பேட்டரி மீது 18 மாத உத்தரவாதமும், ஃபிரேம் மீது 2 ஆண்டு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்தியாவில் 18 நகரங்களில் சர்வீஸ் சென்ட்டர்களும் உள்ளன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: