Home /News /automobile /

டிசம்பரில் அறிமுகமாகும் புதிய பைக்குகள்.. KTM RC390 முதல் ஹார்லியின் Sportster S வரை..

டிசம்பரில் அறிமுகமாகும் புதிய பைக்குகள்.. KTM RC390 முதல் ஹார்லியின் Sportster S வரை..

Royal Enfield Concept KX

Royal Enfield Concept KX

இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் பிரபலமாக காத்திருக்கும் மற்றொரு வாகனம் Yezdi நிறுவனத்திடமிருந்து வர உள்ள ஹிமாலயன் லுக் கொண்ட ADV ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கோவிட்-19 தொற்று தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 3 மாதங்களில் பல புதிய வெளியீடுகள் மற்றும் மறுசீரமைப்புகளுடன் உத்வேகம் பெற தொடங்கி இருக்கிறது. என்றாலும் டிசம்பர் மாதம் என்பது ஆட்டோமொபைல் துறையில் மிகவும் வறட்சியான மாதமாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஜனவரி புதிய ஆண்டின் துவக்க மாதம் என்பதால் பல நிறுனவங்கள் தங்கள் தயாரிப்புகளின் வெளியீடுகளை அடுத்த மாதம் தள்ளி வைக்க முடிவு செய்வார்கள்.

ஒரு சில டூவீலர் தயாரிப்பாளர்கள் மட்டுமே இந்த மாதம் புதிய அறிமுகங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2021 டிசம்பரில் இந்தியாவில் எந்த பைக்கையும் வெளியிட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே இந்த டிசம்பர் 2021-ல் இந்தியாவில் வரும் மற்றும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.,

பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Bounce Infinity electric scooter):

Bounce Infinity E1 Electric Scooter Launched In India, Prices Start At Rs. 45,099
Bounce Infinity E1


பவுன்ஸ் நிறுவனம் தனது இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய சந்தைக்கான விலையை வெகு விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்த ஸ்கூட்டர் 'Battery as a service' என்ற ஆப்ஷனுடன் அறிமுகப்படுத்தப்படும். இது பேட்டரி இல்லாமல் ஸ்கூட்டரை வாங்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. மேலும் இந்த ஆப்ஷன் இது பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கும். ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.92,000-ஆக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், அதே சமயம் Battery as a service ஆப்ஷனின் கீழ், ஸ்கூட்டரின் விலை ரூ.60,000 வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் (Harley Davidson Sportster S):

Harley-Davidson Sportster S Price 2021 | Mileage, Specs, Images of Sportster S - carandbike
Harley-Davidson Sportster S


புதிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தப் போவதாக ஹார்லி-டேவிட்சன் இந்தியா ஏற்கனவே அறிவித்து உள்ளது. நிறுவனத்தின் அறிக்கை படி, 2021 டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவிருக்கும் India Bike Week நிகழ்வில் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அறிமுகம் செய்யப்படும். இதனிடையே வரவிருக்கும் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார் சைக்கிளுக்கான ப்ரீ-புக்கிங்ஸ்களையும் ஹார்லி-டேவிட்சன் தொடங்கி உள்ளது.

யெஸ்டி ரோட்கிங் ஏடிவி (Yezdi Roadking Adventure):

new bike launch price features india: Yezdi Bikes की हो रही वापसी, RE Classic 350 और Honda CB350 को मिलेगी टक्कर - yezdi bikes comeback soon, yezdi new bike yezdi roadking scrambler
Yezdi Roadking Adventure


இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் பிரபலமாக காத்திருக்கும் மற்றொரு வாகனம் Yezdi நிறுவனத்திடமிருந்து வர உள்ள ஹிமாலயன் லுக் கொண்ட ADV ஆகும். இது விரைவில்  அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் இதன் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களில் இது விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரிக்குள் இந்திய சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பைகின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.2 லட்சமாக இருக்கலாம்.

கேடிஎம் ஆர்சி390 (KTM RC390):

2022 KTM RC390 and RC125 of... | full specs and features | Visordown
KTM RC390


இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய RC200 வாகன அறிமுகத்தின் போது, இந்தியாவில் புதிய தலைமுறை RC390-ஐ விரைவில் வெளியிட போவதாக KTM அறிவித்திருந்தது. எனவே புதுப்பிக்கப்பட்ட ஸ்போர்ட் பைக்கின் புதிய தலைமுறை மாடலான KTM RC390 அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
Published by:Arun
First published:

Tags: Automobile, Electric bike, KTM Duke

அடுத்த செய்தி