• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகயுள்ள 7-சீட்டர் கார்கள் - விவரம் உள்ளே!

இந்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகயுள்ள 7-சீட்டர் கார்கள் - விவரம் உள்ளே!

இந்தியாவில் அறிமுகமாகயுள்ள 7-சீட்டர் கார்கள்

இந்தியாவில் அறிமுகமாகயுள்ள 7-சீட்டர் கார்கள்

உலகெங்கிலும் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்த வருடம் இந்தியாவில் தங்கள் 7 சீட்டர் எம்யூவி மற்றும் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஏழு இருக்கைகள் கொண்ட கார்கள் அதன் விசாலமான உட்புறங்கள் மற்றும் பெரிய இடவசதி காரணமாக இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இதையடுத்து பெரிய குடும்பங்களை குறிவைக்கும் முயற்சியில், உலகெங்கிலும் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்த வருடம் இந்தியாவில் தங்கள் 7 சீட்டர் எம்யூவி மற்றும் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான ப்ராண்ட் வாகனத்தை நீங்கள் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், இந்த ஆண்டு இந்திய சந்தையில் களமிறங்கும் ஏழு இருக்கைகள் கொண்ட டாப் பிராண்ட் கார்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவை பின்வருமாறு,

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700)

மஹிந்திரா & மஹிந்திரா தற்போது அதன் பிரபலமான எக்ஸ்யூவி 500-ன் அடுத்த தலைமுறை மாதிரியை உருவாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான உற்பத்தி நிலையத்திற்கு அருகில் XUV700 மாடல் பல முறை டெஸ்ட் டிரைவ் செய்யும் போது காணப்பட்டது. இந்த நிலையில் உள்நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் இப்போது நடப்பு நிதியாண்டில் வரவிருக்கும் மாதங்களில் XUV700 என்ற பெயரில் வாகனத்தை வெளியிட உள்ளனர். இதன் விலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஹூண்டாய் அல்கசார் (Hyundai Alcazar)

தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாயின் வரவிருக்கும் மூன்று வரிசை எஸ்யூவியான அல்காசார் (Alcazar) மாடல், தற்போதுள்ள எஸ்யூவி கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த எஸ்யூவி இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.11.50 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஹூண்டாய் நிறுவனம் 6 இருக்கைகள் கொண்ட வெர்சன் மாடலையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

கியா செல்டோஸ் அடிப்படையிலான MPV (KY-7) (Kia Seltos based MPV (KY-7))

தென் கொரியாவை தளமாகக் கொண்ட கியா மோட்டார்ஸும் நாட்டில் தனது வாகன இலாகாவை விரிவுபடுத்த உள்ளது. மேலும் மிக விரைவில் ஏழு இருக்கைகள் கொண்ட நடுத்தர அளவிலான பல்நோக்கு வாகனத்தை (MPV) ஆட்டோமொபைல் சந்தையில் வெளியிடவுள்ளது. இந்த வாகனம் நிறுவனத்தின் தற்போதைய செல்டோஸ் எஸ்யூவியில் இருந்து உத்வேகம் பெறும் என்றும், மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் எஸ்.யூ.வி கார்களின் பட்டியல்!

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)

மஹிந்திராவின் புகழ்பெற்ற ஸ்கார்பியோ எஸ்யூவியின் அடுத்த தலைமுறை மாடலும் இந்த ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உளவுத்துறை மூலம் கசிந்த தகவலின்படி, இந்த புதிய தலைமுறை வாகனம், அதன் வெளிப்புற மற்றும் உட்புறங்களில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். தற்போதுள்ள ஸ்கார்ப்பியோவுடன் ஒப்பிடும்போது வாகனத்தின் பரிமாணங்களும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: