Home /News /automobile /

இந்தியாவில் அடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ள டாப் 3 எலெக்ட்ரிக் பைக்குகளை தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் அடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ள டாப் 3 எலெக்ட்ரிக் பைக்குகளை தெரிந்து கொள்ளுங்கள்

டாப் 3 எலெக்ட்ரிக் பைக்குகள்

டாப் 3 எலெக்ட்ரிக் பைக்குகள்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியை பின்னணியாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் அல்ட்ராவயலட்டே எஃப்77 என்ற மாடல் தயாரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும், விற்பனையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குறைந்த வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதை மையமாக கொண்டு, எண்ணற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கவர்ச்சிகரமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அதேசமயம், அதிக திறன்வாய்ந்த எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த தேவையை கருத்தில் கொண்டு, நாடெங்கிலும் உள்ள எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் புதிய பைக்குகளை தயார் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த சில மாதங்களில் சந்தையில் விற்பனைக்கு வர உள்ள சில எலெக்ட்ரிக் பைக்குகள் சிலவற்றை இந்த செய்தி மூலமாக பார்க்கலாம்.

அல்ட்ராவயலட்டே எஃப்77

இது டிவிஎஸ் மோட்டார் கம்பெனியை பின்னணியாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் அல்ட்ராவயலட்டே எஃப்77 என்ற மாடல் தயாரிக்கப்பட உள்ளது. இது முழுமையாக ஸ்போர்ஸ் பைக் போன்ற தோற்றத்தில் இருக்கும். நீங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்த 2.9 விநாடிகளில் 0 முதல் 60 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ. ஆகும்.

அல்ட்ராவயலட்டே எஃப்77 பைக்கில், த்ரீ மாடுலர் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். ஒரே சார்ஜில் இது 150 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும்.

இதில் எல்இடி லைட்டிங் பேக்கேஜ், பைக் டிராக்ஸ், டிஎஃப்டி கிளஸ்டர் டிஸ்பிளே, மள்டிபிள் ரைடிங் மோட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

Also read... ரூ.50,000 வரை டிஸ்கவுண்டில் வழங்கப்படும் ஹூண்டாய் கார்கள் - ஆஃப்ர் பெற முந்துங்கள்

எம்ஃபிளக்ஸ் ஒன்

எம்ஃபிளக்ஸ் நிறுவனம் அதன் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்போர்ஸ் பைக்கை, இந்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சிங்கிள் சார்ஜ் மூலம் 200 கி.மீ. மைலேஜ் பெறலாம். இது அதிகபட்சமாக 200 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கும். ஸ்டார்ட் செய்த 3 நொடிகளில் இது 0 முதல் 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதில் எல்ஈடி லைட்டிங் பேக்கேஜ், ஜிபிஎஸ் நேவிகேசன் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளன.

ஹோப் ஓஎக்ஸ்ஒ

ஹோப் எலெக்ட்ரிக் நிறுவனம், முற்றிலும் சொந்த தயாரிப்பிலான எலெக்ட்ரிக் பைக்கை இந்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இது அல்ட்ராவயலட்டே மற்றும் எம்ஃபிளக்ஸ் நிறுவன பைக்குகளை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்படௌள்ளது. சிங்கிள் சார்ஜ் மூலம் 150 கி.மீ. தொலைவுக்கு மைலேஜ் கொடுக்கும். ஸ்டார்ட் செய்த 10 நொடிகளில் 0 - முதல் 90 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி