• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மாருதி சுசூகி இக்னிஸ் முதல் ரெனால்ட் க்விட் வரை - பெஸ்ட் மைலேஜ் தரும் கார்கள் விவரம்!

மாருதி சுசூகி இக்னிஸ் முதல் ரெனால்ட் க்விட் வரை - பெஸ்ட் மைலேஜ் தரும் கார்கள் விவரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

மாருதி சுஸுகியின் ‘இக்னிஸ்’ சிறிய வடிவில், பயணிகள் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இப்போது லிட்டருக்கு பெட்ரோல் ரூ.110ஐ தாண்டியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று, மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது. எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களை நோக்கி பலர் செல்ல தொடங்கி உள்ளனர். வாகனத்தை நன்றாகப் பராமரிப்பதால் வண்டி நல்ல மைலேஜ் கொடுக்கும் என்பது முக்கியமான விஷயமாகும். இருப்பினும் வாகனம் அதிக மைலேஜ் கொடுப்பது அவசியமாகும்.

சிறிய எஞ்சின்களைக் கொண்ட கார்கள் சிறந்த மைலேஜை வழங்குவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. மாருதி சுஸுகி தயாரிப்புகள் நல்ல மைலேஜினை தருகிறது என்று மோட்டார் துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தற்போது வரவிருக்கும் செலிரியோ 2021 ஆனது சிறந்த கார் ஆக வரும் என்கின்றனர்.செலிரியோ வரும் நவம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனிடையே சிறந்த மைலேஜ் தரும் கார்களை பற்றி இங்கு காணலாம்.,

மாருதி சுசூகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) :

மாருதி சுஸுகியின் ‘இக்னிஸ்’ சிறிய வடிவில், பயணிகள் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கார் மேனுவல் மற்றும் AMT ஆகிய இரண்டு வசதிகளுடன் வருகிறது.

மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso:

மாருதி சுஸுகியின் ‘எஸ்-பிரஸ்ஸோ’ மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். உயர்ந்த இருக்கை மற்றும் காம்பேக்ட் ஆக இருப்பதால் இதனை பலரும் தேர்வு செய்கின்றனர். இது ஹூட்டின் கீழ் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. ஏஜிஎஸ் (AGS) டிரான்ஸ்மிஷன் வசதியை பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) :

‘வேகன்ஆர்’ மாருதி சுஸுகியின் பெரிய சக்ஸஸ் மாடல் ஆகும். பல ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றிகரமான தயாரிப்பாக இந்த கார் இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் விற்பனை தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த மாடல் ஏஜிஎஸ் டிரான்ஸ்மிஷன் வசதியையும், 1.2 எல் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினையும் கொண்டு வருகிறது.

டட்சன் ரெடிகோ (Datsun RediGo) :

இந்தியாவில் ‘நிசான்’ நிறுவனம் டட்சன் (Datsun) மாடலை விற்பனை செய்கிறது. ‘டட்சன் ரெடிகோ’ 799cc மற்றும் 999cc இன்ஜின் வசதியை கொண்டிருக்கிறது. இது ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் கொண்டுள்ளது.

ரெனால்ட் க்விட் (Renault Kwid) :

சிறிய ரக கார் பிரிவில் மாருதி சுசூகியின் முக்கிய போட்டியாளர்களில் க்விட் மாடலும் ஒன்றாகும். அதன் ஸ்டைலிங் மற்றும் கேபின் போன்றவை சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். 799 சிசி மோட்டார் வசதியுடன் வரும் இதில், இரண்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளது.

மாருதி சுசூகி ஆல்டோ (Maruti Suzuki Alto ) :

மாருதி சுசூகியின் ‘ஆல்டோ’ மாடலும் ஒரு பெரிய சக்ஸஸ் மாடலாகும். பெப்பி என்ஜின், காம்பேக்ட்டான வசதி, அதிக மைலேஜ், எந்தவித சாலைக்கும் ஏற்ப செயல்படும் திறன் என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதுவே சந்தையில் பல்வேறு வாடிக்கையாளர்களை வாங்க வைக்கின்றது. AGS டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இது நகரத்தில் வாகனத்தை ஓட்டும்போது சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது.

Also read... பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பதிலாக எந்த பைக்குகள் வாங்கலாம்!

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) :

ஸ்விஃப்ட் என்பது ஸ்டைல் ​​மட்டுமல்ல, அதிக மைலேஜையும் தரும் கார் ஆகும். இந்த மாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பலரும் இன்றளவும் இதனை வாங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை ஆகும். மாருதி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மாருதி சுசூகி டிசையர் (Maruti Suzuki Dzire) :

மாருதி சுஸுகி ‘டிசையர்’ பலருக்கு மிகவும் பிடித்த மாடலாக இருக்கிறது. அகன்ற பெரிய கேபின், ஸ்டைலான தோற்றம், அதிக மைலேஜ் என சிறந்த காராக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: