• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கார் வாங்க திட்டமா? அட்டகாசமான டாப் 5 டீசல் கார்களின் விவரம் இதோ!

கார் வாங்க திட்டமா? அட்டகாசமான டாப் 5 டீசல் கார்களின் விவரம் இதோ!

அட்டகாசமான டாப் 5 டீசல் கார்கள்

அட்டகாசமான டாப் 5 டீசல் கார்கள்

டாடா நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் மாடல் இந்தியாவின் மலிவான ‘ஹேட்ச்பேக்’ வசதியினை கொண்டிருக்கிறது.

  • Share this:
பெட்ரோல், டீசல், மின்சாரம் என எல்லா வகையான கார்களின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது மின்சாரத்தினால் இயங்கும் கார்களின் வரத்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் விற்பனை ஒருபக்கம் சரிந்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் கார் நிறுவனங்கள் தற்போது விலையை குறைந்துள்ளன. BS6 டீசல் கார்கள் அவற்றின் BS4 பதிப்புகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக விலை உயர்ந்திருக்கிறது.

ஒரு காலத்தில் 35 சதவீதமாக இருந்த டீசல் கார்களின் பங்கு, தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருளை சிக்கனப்படுத்தும் கார்களையே வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். எனவே அட்டகாசமான டாப் 5 சிறந்த டீசல் கார்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS :

ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS மாடல் தான், தற்போது அதிக எரிபொருள் திறன் கொண்ட டீசல் காராக உள்ளது. ஒரு லிட்டருக்கு 26.2 கிமீ மைலேஜினை தருகிறது. இது 1.2-லிட்டர் CRDI இன்ஜினைக் கொண்டு இருக்கிறது. 190 Nm உடன் 74 bhp ஐ உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் AMT வசதியை பெற்றுள்ளது. மேலும் எட்டு அங்குல தொடுதிரை, ஸ்மார்ட்போன் இணைப்பு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கான 5.2-இன்ச் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற நவீன வசதிகளை கொண்டுள்ளது. இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 26.2 கி.மீ ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ.7.21 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் i20 :

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த கார் ‘i20’ ஆகும். அதிக வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக், 10.25-இன்ச் தொடுதிரை, போஸ் சவுண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், க்ரூஸ் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டயர் பிரஷர் கண்காணிப்பு போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி மற்றும் 240 என்.எம் ஆற்றலை உருவாக்குகிறது. 25.2 கிமீ/லி வேகத்தை வழங்கும் ஆறு ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது.இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 25.2 கி.மீ ஆகும். இந்தியாவில் ரூ.8.22 லட்சம் முதல் ரூ.10.77 லட்சம் வரைக்கு கிடைக்கிறது.

டாடா ஆல்ட்ரோஸ் :

டாடா நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் மாடல் இந்தியாவின் மலிவான ‘ஹேட்ச்பேக்’ வசதியினை கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் பாதுகாப்பான ஹேட்ச்பேக்குகளில் ஒன்று ஆகும். இதுமட்டுமில்லாமல் டீசல் எஞ்சினைப் பொறுத்தவரை மிகவும் சிக்கனமான ஒன்றும் கூட. இது 89 பிஎச்பி மற்றும் 200 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேட்ச்பேக்கில் ஏழு அங்குல தொடுதிரை அமைப்பு, ஏழு அங்குல TFT கலர் MID (மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே) , புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் போன்ற பல வசதிகள் உள்ளன. ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது. இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 25.11 கி.மீ ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ.7.05 லட்சம் முதல் ரூ.9.6 லட்சம் வரை என்ற விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா அமேஸ் :

ஹோண்டா அமேஸ் 1.5-லிட்டர் ‘டீசல்’ எஞ்சினுடன் வருகிறது. இது ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன், 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் வழங்க கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். இதனை CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைந்து பயன்படுத்தும் போது, இதன் ஆற்றல் 79 பிஎச்பி மற்றும் 160 என்எம் ஆக குறைகிறது. இது 200 என்எம்மில் 24.7 கி.மீ, 160 என்எம்மில் 21 கி.மீயையும் தருகிறது. சப்-காம்பாக்ட் செடான் 420 லிட்டர் அளவிலான சிறந்த ‘பூட் ஸ்பேஸ்’ கொண்டுள்ளது.

புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஏசி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய ஏழு இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது. இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 21 கி.மீ முதல் 24.7 கி.மீ ஆகும். இந்தியாவில் ரூ.8.67 லட்சம் முதல் ரூ.11.15 லட்சம் வரைக்கு கிடைக்கிறது.

கியா சோனெட் :

கியா நிறுவனத்தின் சோனெட் மாடல் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இது ஆறு ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்போது, 240 என்எம் உடன் 99 பிஎச்பியை உருவாக்குகிறது. இந்தியாவின் மிக அதிக எரிபொருள் திறன் கொண்ட டீசல் கார்களில் இதுவும் ஒன்றாகும்.விற்பனையிலும் முதல் இடத்தை வகிக்கிறது.390-லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 211 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸினை கொண்டுள்ளது.

காற்றோட்டமான முன் இருக்கைகள், முழு டிஜிட்டல் கருவி கிளஸ்டர், UVO இணைப்புத் தொகுப்பு, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பல அதிநவீன வசதிகளுடன் வருகிறது. இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 24.1 கி.மீ ஆகும். இந்தியாவில் ரூ.8.55 லட்சம் முதல் ரூ.12.65 லட்சம் வரைக்கு கிடைக்கிறது.

Also read... Bajaj Vs EV Startups: கொளுத்தி போட்ட பஜாஜ் - பதிலடி கொடுக்கும் ஓலா, ஏதர் நிறுவனங்கள்!

ஹூண்டாய் ஆரா :

இந்த பிரிவில் ஆறாவதாக ஒரு காரினையும் பார்க்கலாம். அதிக எரிபொருள் திறன் கொண்ட சப்-காம்பாக்ட் டீசல் கார் உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் ஹூண்டாய் ஆராவை தாராளமாக வாங்கலாம். இதில் ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS இன் 1.2-லிட்டர் எஞ்சின் 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. இது ஏறக்குறைய ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS வசதிகளை பெற்றுள்ளது எனலாம். இது ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் ஸ்டாண்டர்ட்டாக கிடைக்கிறது.இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 25.35 கி.மீ ஆகும். ஹூண்டாய் ஆரா இந்தியாவில் ரூ.7.91 லட்சம் முதல் ரூ.9.37 லட்சம் வரைக்கு கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: