Home /News /automobile /

டாடா முதல் ஹூண்டாய் வரை... முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கும் சிறந்த மின்சார வாகனங்கள்!

டாடா முதல் ஹூண்டாய் வரை... முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கும் சிறந்த மின்சார வாகனங்கள்!

மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக காற்று மாசுபாட்டை தடுக்க மின்சார வாகனங்களின் வருகையை ஊக்குவித்து வருகின்றன.

தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒவ்வொரு இந்தியரும் 100 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மற்றொருபுறம், டீசல் விலையோ பெட்ரோலுக்கு நிகரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை, பெட்ரோல் விலையை விட 5 ரூபாய் தான் குறைவாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, புவி வெப்பமடைதல் தற்போது ஒரு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கிறது. கனடா மற்றும் அண்டார்டிகாவில் எல்லா நேரத்திலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்கள் உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபட்டால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் தான்.

இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக காற்று மாசுபாட்டை தடுக்க மின்சார வாகனங்களின் வருகையை ஊக்குவித்து வருகின்றன. மின்சார வாகனங்களை மக்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு பல்வேறு மானியங்களையும் வழங்கி வழங்குகின்றன. முன்பெல்லாம் மின்சார வாகன உற்பத்தியில் ஓரிரு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் EV உற்பத்தியில் இறங்கியுள்ளன. அதன்படி, இந்தியாவில் உங்களுக்கு பிடித்த முன்னணி நிறுவனங்கள் வழங்கும் சிறந்த மின்சார வாகனங்கள் குறித்து பின்வருமாறு பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. டாடா டிகோர் ஈ.வி: (Tata Tigor EV)

300 கிலோமீட்டருக்கு மேல் அனைத்து மின்சார வரம்புகளுடனும் 15 லட்சம் ரூபாய்க்கு கீழ் இரண்டு தனித்தனி மின்சார வாகனங்களை வழங்கிய இந்தியாவின் ஒரே கார் உற்பத்தியாளர் என்றால் அது டாடா மோட்டார்ஸ் தான். இரு EV-களில் ஒன்றான, டாடா டிகோர் ஈ.வி 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வாகனங்கள் மூன்று வகைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் டாப் ஸ்பெக் மாடலின் விலை ரூ.12.99 லட்சம் ஆகும். இது 306 கிமீ மின்சார வரம்புடன் விற்பனை செய்யப்படும் மலிவு விலை ஈவி ஆகும்.

புதிய டிகோர் இப்போது 26.4 kWh பேட்டரியுடன் ஜிப்டிரான் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீக்கு மேல் மைலேஜ் கொடுக்கும். இந்த கார் இரண்டு ஓட்டுநர் மோட்களுடன் வருகிறது. அதாவது டிரைவ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகும். இந்த கார் 75 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும் ஒரு நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டரை முன்புறத்தில் பெற்றுள்ளது. சுமார் 8.5 மணி நேரத்தில் 15 ஏ சாக்கெட் மூலம் டிகோர் ஈவியை சார்ஜ் செய்யலாம். வேகமான சார்ஜர் மூலம், பேட்டரியை சுமார் 60 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யமுடியும்.

2. டாடா நெக்ஸான் ஈ.வி (Tata Nexon EV)

இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாடா-வின் இரண்டாவது மலிவு விலை மின்சார SUV ஆகும். மேலும் இதன் போட்டியாளரான MG ZS EV-ஐ விட கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்சம் குறைவாக விற்கப்படுகிறது. இது தவிர டாடா நெக்ஸான் EV, 30.2 kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ வரம்பை கொடுக்கும். இது முன்புறத்தில் பொருத்தபட்டிருக்கும் நிரந்தர காந்த ஒத்திசைவு மோட்டார் மூலம் 129PS பவர் மற்றும் 245Nm பீக் டார்க் திறனை வழங்குகிறது.

நெக்ஸான் EV-ஐ 8.5 மணி நேரத்தில் 15A சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம். வேகமான சார்ஜர் மூலம், பேட்டரியை சுமார் 60 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும். நெக்ஸான் EV-யின் விலை ரூ .13.99 லட்சத்தில் தொடங்கி ரூ .16.85 லட்சம் வரை செல்லும். ரிமோட் டயக்னொஸ்டிக், ரேஞ்ச், சார்ஜிங் ஸ்டேட்டஸ் போன்ற 30-க்கும் மேற்பட்ட அம்சங்களுடன் Ziptron தொழில்நுட்பம், iRA இணைக்கப்பட்ட தொகுப்பையும் இந்த வாகனத்துடன் நீங்கள் பெறலாம்.

Also read... மகேந்திரா முதல் டாட்டா வரை - தீபாவளிக்குள் வெளியாகும் டாப் 5 எஸ்.யூ.வி கார்கள்!

3. எம்ஜி இசட்எஸ் ஈ.வி (MG ZS EV)

ZS EV இந்தியாவில் MG-யின் இரண்டாவது தயாரிப்பாகும். ZS EV ஒரு நல்ல தோற்றமுடைய கார் மற்றும் வெளிநாட்டில் விற்கப்படும் அதன் பெட்ரோல் வேரியண்ட்-ஐ இது ஒத்திருக்கிறது. ZS EV 44.5kWh திறன் கொண்ட திரவ-குளிரூட்டப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியை பெற்றுள்ளது. எம்ஜி அதிகபட்சமாக 340 கிமீ வரம்பை கொடுக்கும். இது நெக்ஸான் ஈவியை விட சற்று அதிகம். இந்த மோட்டார் 143 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளியிடும். இது வெறும் 8.5 வினாடியில் 100 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ZS EV மூன்று டிரைவிங் மோட்களுடன் வருகிறது. அதாவது ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகும். சார்ஜிங் அடிப்படையில், எம்ஜி தனது டீலர்ஷிப்களில் 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவியுள்ளது. இதன் மூலம், காரை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். கூடுதலாக, நிறுவனம் 7.4 கிலோவாட் ஏசி ஹோம் சார்ஜரைப் பொருத்தும். அதில் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 6 முதல் 8 மணி நேரம் எடுக்கும்.

4. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் (Hyundai Kona Electric)

கோனா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார எஸ்யூவி இந்திய சந்தையில் முதல் முறையாக நுழைந்துள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, கோனா எலக்ட்ரிக் 39.2-கிலோவாட்-மணிநேர லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரியைப் பெற்றுள்ளது. ஹூண்டாயின் கூற்றுப்படி, இந்த ARAI வாகனம் 452 கிமீ வரம்பைக் கொடுக்கும் என்று கூறியுள்ளது. மேற்கண்ட வாகனங்களின் வரம்பை காட்டிலும் மிக அதிகம். இந்த வாகனத்தை Eco+, Eco, Comfort மற்றும் Sport உட்பட நான்கு டிரைவிங் மோட்களில் இதனை பெறலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Hyundai, TATA

அடுத்த செய்தி