ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் எஸ்.யூ.வி கார்களின் பட்டியல்!

ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் எஸ்.யூ.வி கார்களின் பட்டியல்!

எஸ்.யூ.வி கார்

10 லட்சத்துக்கும் குறைவான விலையில், க்ருசே கன்ரோலருடன் விற்பனையாகி வரும் எஸ்.யூ.மாடல் கார்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியா கார் சந்தையைப் பொறுத்த வரையில் குறைவான விலையில் அதிக பியூச்சர்களைக் கொடுக்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றன. அந்தவகையில் 10 லட்சத்துக்கும் குறைவான விலையில், க்ருசே கன்ரோலருடன் விற்பனையாகி வரும் எஸ்.யூ.மாடல் கார்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300 (Mahindra XUV 300)

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான எக்ஸ்.யூ.வி 300 மாடல் கார், 1197 முதல் 1497 வரையிலான என்ஞின் திறன் கொண்டது. 17 முதல் 20 லிட்டர் வரையிலான மைலேஜ் கொடுக்கும் இந்தக் கார்கள், NCAP கிராஷ் சோதனைகளில் 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளது. cruise control வசதியுடன் 7.95 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 12.70 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)

தென் கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் அறிமுகப்படுத்திய ஹூண்டாய் வென்யூ கார்கள் சந்தையில் அதிகளவு விற்பனையாகி வருகின்றன. காரணம், அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விலையில் ஹூண்டாய் வென்யூ உள்ளது. ரூ.6.86 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.11.66 லட்சம் விலையில் இந்த கார்கள் கிடைக்கின்றன. லிட்டருக்கு 23.3 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது. cruise control ஆப்சனாக கொடுக்கப்படுகிறது.

Also read... ஊரடங்கு காலத்தில் உங்கள் காரை சரியாக பராமரிப்பதற்கான வழிகள்!

மாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza)

மாருதி சுசூகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யு.வி மாடல் கார் 9 வேரியண்டுகளில் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய கிரில் அமைப்பு மற்றும் புரொஜெக்ட் ஹெட்லைட்டுகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள் மற்றும் ஏர் இன்டேக் அமைப்புகள் உள்ளன. ரிவர்ஸ் சென்சார்கள் மற்றும் டூயல் ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக cruise control கொடுக்கப்பட்டுள்ள இந்த எஸ்.யு.வி மாடல் கார்கள் ரூ. 7.39 லட்சத்தில் இருந்து ரூ.11.20 லட்சம் விலையில் சந்தையில் கிடைக்கின்றன.

கியா சோனட் (Kia Sonet)

தென் கொரிய நிறுவனமான கியா சோனட் பல்வேறு அற்புதமான சிறப்பம்சங்களும், பியூச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் இந்தக் கார்கள், விற்பனையிலும் களைகட்டுகின்றன. எச்.டி லைன், ஜி.டி லைன் என இரண்டு வகையான பாடி லைன்களில் இந்த எஸ்.யு.வி கார்கள் கிடைக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஃபைவ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ் ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. ரூ.6.79 லட்சத்தில் இருந்து அதிகபட்ச விலையாக ரூ.13.19 லட்சம் வரை கிடைக்கிறது. நடுத்தர வாடிக்கையாளர்களும் வாங்கும் விலையில் இருப்பதால், இந்த கார்கள் அதிக விற்பனையாகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: