மகேந்திரா முதல் டாட்டா வரை - தீபாவளிக்குள் வெளியாகும் டாப் 5 எஸ்.யூ.வி கார்கள்!

டாட்டா

எம்.ஜி ஆஸ்டர் நிறுவனத்தின் அடுத்த மாடலாக நிலையான எம்.ஜி ஆஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

  • Share this:
இந்திய ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை எஸ்.யூ.வி மாடலில் நிறைய வகைகள் உள்ளன. அவரவர் தேவைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் மிகச்சிறிய எஸ்.யூ.வி முதல் ஆடம்பரமான எஸ்.யூ.வி வரை மாடல்கள் குவிந்து கிடக்கின்றன. விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் முன்னணி நிறுவனங்கள் புதிய எஸ்.யூ.வி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்தவகையில், புதிதாக அறிமுகமாகும் டாப் 5 எஸ்.யூ.வி கார்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

டாடா பஞ்ச் (Tata Punch) :

டாடா நிறுவனம் எஸ்.யூ.வி செக்மெண்டில் டாட்டா பஞ்ச் என்ற புதிய மாடலை விரைவில் வெளியிட உள்ளது. இந்த பிராண்டு வெளியாகும்போது மஹேந்திரா கே.யூ.வி 100 மற்றும் ஹூண்டாய் காஸ்பர் பிராண்டுகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்பீரமான தோற்றம் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஹர்மன் ஒலி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகிய 2 தேர்வுகளில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. விலை எகஸ் ஷோரூமில் 4.5 லட்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஹேந்திரா எக்ஸ்.யூ.வி 700 (Mahindra XUV700) :

மஹேந்திரா நிறுவனத்தின் இந்த புதிய மாடல் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. எக்ஸ்.யூ.வி 700, இரு என்ஜின் விருப்பங்களில் வரும். ஒரு என்ஜின் 200 ஹெச்.பி, 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், மற்றொன்று 185 ஹெச்.பி, 2.2 லிட்டர் ஆயில் பர்னர் என்ஜின் தேர்வுகளில் வெளியாகலாம். இந்தக் கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ் மிஷனை உள்ளடக்கியதாக இருக்கும். தொடக்க விலை 11.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) இருக்கலாம்.

Also read... ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் 2020-ல் தங்கம் வென்ற வீரர்களுக்கு "XUV700 ஜாவெலின்" வாகனத்தை பரிசாக வழங்கும் மஹிந்திரா!

எம்ஜி ஆஸ்டர் (MG Astor)

எம்.ஜி ஆஸ்டர் நிறுவனத்தின் அடுத்த மாடலாக நிலையான எம்.ஜி ஆஸ்டர் வெளியிடப்பட உள்ளது. இசட் எஸ் எலக்டிரிக் காரின் பதிப்பாக இருக்கும் என கூறப்படும் நிலையில், அந்த காரின் மேம்பட்டதாக புதிய மாடல் இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ஹெட் லேம்புகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாக பம்பர் சேர்க்கப்பட்டு, அலாய் வீல்களுடன் கிடைக்கும். லெவல் 2 ஆட்டோமேடிக், லேன் கீப் அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

வோல்ஸ்வாகன் டைகன் (Volkswagen Taigun)

வோல்ஸ்வாகன் டைகன், செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 1.0L TSI மற்றும் 1.5L TSI ஆகிய இரண்டு எஞ்சின் விருப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். எக்ஸ் ஷோரூம் விலையில் தொடக்க விலையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற பிராண்டுகளுக்கு போட்டியாக இருக்கும்.

ஃபோர்ஸ் கூர்க்க (Force Gurkha)

ஃபோர்ஸ் கூர்க்கா விரைவில் டீலர்ஷிப்புகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கார் புதிய ஸ்டைல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபினுடன் வர உள்ளது. இந்தக் காரின் என்ஜின் 2.2 லிட்டர் எஞ்சின் அமைப்புடன், 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: