• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நடப்பாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள SUV கார்களின் பட்டியல்!

நடப்பாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள SUV கார்களின் பட்டியல்!

மாதிரி படம்

மாதிரி படம்

டாடா நிறுவனம் தனது மினி-எஸ்யூவி பஞ்சை (mini-SUV Punch) விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் ஆட்டோ மொபைல் மார்க்கெட் மெல்ல மெல்ல வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சில புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி வருகின்றன. 2021-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 3 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டில் தீபாவளி உள்ளிட்ட பெரிய பண்டிகை நிகழ்வுகள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன. எனவே பண்டிகை காலத்தில் இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சில கார்களின் பட்டியல் குறித்து இப்போது பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700)

SUV மாடல்களை பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதை நிறைவேற்றுவதில் நல்ல பெயரை வாங்கி இருக்கிறது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா. இந்நிறுவனம் விரைவில் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்ஸ், பனோரமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், சேஃப்டி அலெர்ட்ஸ் மற்றும் டிரைவர் ட்ரவுசினஸ் டிடெக்ஷன் போன்ற பல முக்கிய அம்சங்களுடன் கூடிய புதிய மஹிந்திரா XUV 700-ஐ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் அதிகாரபூர்வ லாஞ்ச் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆல் நியூ XUV 700-ன் சில வேரியன்ட்களின் விலையை நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாகனங்களில் 5 சீட்டர், மேனுவல் கான்ஃபிகரேஷனுடன் கூடிய MX வெர்ஷனின் விலை ரூ.11.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாடா பஞ்ச் (Tata Punch):

டாடா நிறுவனம் தனது மினி-எஸ்யூவி பஞ்சை (mini-SUV Punch) விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்றும் மேலும் இது 86 பிஎஸ் பவரை 113 என்எம் பீக் டார்க் உடன் உற்பத்தி செய்கிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது மஹிந்திரா KUV 100 காருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Tata mini-SUV Punch காரின் விலை ரூ.5 லட்சத்திலிருந்து - ரூ.8 லட்சம் வரை இருக்கலாம். H2X/ HBX என குறிப்பிடப்படும் வரஉள்ள SUV-ன் டிசைனை ஏற்கனவே நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வோக்ஸ்வாகன் டைகன் (Volkswagen Taigun):

ஜெர்மன் மோட்டார் வாகன உற்பத்தியாளரான வோக்ஸ்வாகன் நிறுவனம் தனது மிட்-சைஸ் SUV காரான Taigun-ஐ வரும் செப்டம்பர் 23 அன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்த காரின் வெளியீட்டிற்கு முன்பே சுமார் 10,000 புக்கிங்களை ஏற்கனவே பெற்றுள்ளதாக வோக்ஸ்வாகன் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்த மிட்-சைஸ் SUV-யின் விலை ரூ.10 லட்சம் - ரூ.16 லட்சம் வரை விலை இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... டிரைவிங் டெஸ்ட்டில் ஃபெயிலாகும் நபர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் டெல்லி போக்குவரத்து துறை!

எம்ஜி ஆஸ்டர் (MG Astor):

எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் 'ஆஸ்டர்' என்ற SUV-யை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆஸ்டர் காரின் சில முக்கிய அம்சங்களை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இதில் சன்ரூஃப் மற்றும் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பிற அம்சங்களுடன் இன்டஸ்ட்ரியிலேயே முதன் முதலாக AI Bot மற்றும் Level 2 அட்டாநமஸ் டிரைவிங் உள்ளிட்டவை அடங்கும். எம்ஜி ஆஸ்டர் கார் 1.5L பெட்ரோல் எஞ்சின் 115பிஎஸ் பவர் மற்றும் 150 என்எம் பீக் டார்க் & 1.0 L டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎஸ் மற்றும் 112 என்எம் பீக் டார்க் திறனை உருவாக்கும் 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் வரும் என தெரிகிறது.

சிட்ரோய்ன் சி 3 (Citroen C3):

பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோயன் நிறுவனம், தனது சி 3 காம்பாக்ட் எஸ்யூவி-யை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. C3 கார் ஏற்கனவே ஐரோப்பா, லத்தீன் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ரூ.8-13 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: