புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்ட சிறந்த மலிவு விலை இருசக்கர வாகனங்களின் பட்டியல்!

மலிவு விலை இருசக்கர வாகனங்களின் பட்டியல்

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, மோட்டார் வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் உங்கள் ஸ்மார்ட்போனை இன்ஸ்ட்ருமென்டல் கிளஸ்டருடன்

  • News18
  • Last Updated :
  • Share this:
புளூடூத் கனெக்ட்டிவிட்டி என்பது இரு சக்கர வாகன சந்தையில் சமீபத்தில் பிரபலமடைந்து வரும் ஒரு அம்சமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியம் அம்சமாகக் கருதப்பட்ட இந்த ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, மோட்டார் வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் உங்கள் ஸ்மார்ட்போனை இன்ஸ்ட்ருமென்டல் கிளஸ்டருடன் இணைக்கும் வசதியை பேக் செய்வதன் மூலம் கனெக்ட்டிவிட்டி விருப்பம் இன்று மிகவும் முக்கியமாகிவிட்டது. அந்த வகையில் வாகன சந்தையில் புளூடூத் இணைப்புடன் மிகவும் மலிவான விலையில் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்கள் குறித்து பின்வருமாறு காண்போம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ், எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200 டி: (Hero Xtreme 200S, Xpulse 200, Xpulse 200T) ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) வழங்கும் இந்த மூன்று 200 சிசி மோட்டார் சைக்கிள்களும் புளூடூத் இணைப்பை வழங்கும் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. எனவே ரைடர்ஸ் தங்கள் தொலைபேசியை ஹீரோ ரைட் கைட் (Hero RideGuide) ஆப் மூலம் பைக்குடன் இணைக்க முடியும். மேலும் கால் ஸ்டேட்டஸ், பயண விவரங்கள் மற்றும் கியர் எண்ணைத் தவிர விரிவான நவிகேஷனை காணலாம்.

டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4 வி (TVS Apache RTR 200 4V): பிளூடூத் வசதி கொண்ட வாகன பிரிவில் அதிக அம்சம் நிறைந்த மோட்டார் சைக்கிள்களில் ஆர்.டி.ஆர் 200 4 வி ஒன்றாகும். பைக்கின் புளூடூத்-பேரபில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், அழைப்பாளர் பெயர், அதிக வேகம் மற்றும் லேப் நேரம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை வழங்குகிறது. லீன் ஆங்கிள் போன்றவற்றைக் கண்காணிக்க ஒரு சவாரிக்கு உதவும் தொலைபேசி பயன்பாட்டையும் பைக்குடன் டி.வி.எஸ் வழங்குகிறது.

சுசுகி அக்சஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Access 125, Burgman Street) : இந்த வாகனம் ப்ளூடூத் இணைப்பு விருப்பத்தை கொண்டுள்ளது. அக்சஸ் 125-இன் டிஸ்பிளே, கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன், எதிர்பார்க்கப்படும் பயண நேரம், அழைப்பாளர் ஐடி, ஓவர்ஸ்பீடிங் எச்சரிக்கை மற்றும் தொலைபேசியின் பேட்டரி நிலை ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும் இந்த அம்சம் Android பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

Also read... ரூ.10 லட்சத்திற்கும் கீழ் விற்பனையாகும் சிறந்த ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் வாகனங்களின் பட்டியல்!

டி.வி.எஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125): டி.வி.எஸ் என்டார்க் 5-அங்குல எல்.சி.டி. டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் இயந்திர வெப்பநிலை, சேவை நினைவூட்டல் மற்றும் சராசரி வேகம் ஆகியவற்றை காண்பிக்கின்றன. நிறுவனத்தின் ‘ஸ்மார்ட் சோனெக்ட்’ (Smart Xonnect) அமைப்பு புளூடூத் இணைப்பு வழியாக உங்கள் ஸ்மார்ட்போனில் இந்தத் தரவை அணுக உதவுகிறது.

யமஹா FZS-FI (Yamaha FZS-FI): யமஹா சமீபத்தில் தனது பிரபலமான FZS-FI மாடலை புளூடூத்-எனேபில்டு டிஸ்பிளே மூலம் புதுப்பித்துள்ளது. இதற்கு நிறுவனத்தின் கனெக்ட் எக்ஸ் ஆப்பை iOS ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த ஆப் வாகனத்துடன் பேரிங் செய்யப்பட்டவுடன் பேட்டரி மின்னழுத்தம், வாகனத்தின் இருப்பிடம் மற்றும் சராசரி வேகம் ஆகிய தகவல்கள் டிஸ்பிளேவில் தெரியும். இந்த மெக்கானிசம் ஒரு hazard mode-ஐ வழங்குகிறது. உங்கள் வாகனம் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்படும் போது பைக்கின் நான்கு குறிகாட்டிகளையும் தானாகவே இயக்குகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: