• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அடுத்த ஆண்டில் வெளிவரவிருக்கும் அட்டகாசமான 5 எஸ்யூவி கார்கள்!

அடுத்த ஆண்டில் வெளிவரவிருக்கும் அட்டகாசமான 5 எஸ்யூவி கார்கள்!

அடுத்த ஆண்டில் வெளிவரவிருக்கும் அட்டகாசமான 5  எஸ்யூவி கார்கள். (Image source: Teambhp)

அடுத்த ஆண்டில் வெளிவரவிருக்கும் அட்டகாசமான 5 எஸ்யூவி கார்கள். (Image source: Teambhp)

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 700’ கார் வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

  • Share this:
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான சந்தை சமீப ஆண்டுகளில் பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் சிறிய ரக எஸ்யூவி கார்களும் அதிக விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. எஸ்யூவி கார்களின் புகழ் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் இந்திய வணிக சந்தையில் கார்களின் இடம் அதிகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு வெளிவரவிருக்க கூடிய , குறிப்பாக அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘டாப் 5 ‘ எஸ்யூவி கார்களை பற்றி இங்கு பார்க்கலாம்.,

மஹிந்திரா ஸ்கார்பியோ :

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 700’ கார் வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் வரவேற்பு காரணமாகவே அடுத்த வருடத்தின் முதல் பாதியிலேயே புதிய எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது மஹிந்திரா நிறுவனம்.

மஹிந்திராவின் பழைய எஸ்யூவிக்களில் இருப்பது போல, இதிலும் பாடியானது ஆன்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. மற்ற வகையில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றினை ஒரே சமயத்தில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நியூ ஜென் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா :

புதுப்பிக்கப்பட்ட ‘மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா’ 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்யூவி புதுப்பிக்கப்பட்ட ஹார்டெக்ட் இயங்குதளத்தால் இயங்கக்கூடிய வகையில் வருகிறது. பெட்ரோலுடன் இயங்கும் வகையில் வரும் இந்த எஸ்யூவி மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது.

மாருதி YTB :

மாருதி சுஸுகியின் பெரும்பாலான எஸ்யூவி கார்கள் விலை குறைவானது. அடுத்த ஆண்டில் மாருதி நிறுவனம் ‘ YTB’ என்ற எஸ்யூவியை அறிமுகப்படுத்தலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நியூ ஜென் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸுக்கு அடுத்து இந்த எஸ்யூவி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ‘பலேனோ’ ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டது ஆகும். அடுத்த ஆண்டின் பாதியிலேயோ அல்லது இறுதியிலோ மாருதி ‘YTB’ அறிமுகம் செய்யப்படலாம்.

Also read... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக ஹைப்பர் சார்ஜர் - Ola நிறுவனம் அறிமுகம்!

ஜீப் மெரிடியன் :

ஜீப் இந்தியா நிறுவனம் அடுத்த ஆண்டு ‘7 சீட்டர்’ எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. காரின் வெளிப்புறம், உட்புறத்தில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். இது 200-பிஎஸ் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு, 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி-டொயோட்டா :

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்திய சந்தையில் நடுத்தர அளவிலான எஸ்யூவியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டின் இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளது. பெங்களூரு அருகே உள்ள டொயோட்டா நிறுவனத்தில் இந்த கார் அசெம்பிள் செய்யப்படும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: