• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் விற்பனையாகும் டாப் 5 மோட்டார் பைக்குகள்: ராயல் என்ஃபீல்டு முதல் ஹோண்டா ஹார்னெட் 2.0 வரை..

இந்தியாவில் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் விற்பனையாகும் டாப் 5 மோட்டார் பைக்குகள்: ராயல் என்ஃபீல்டு முதல் ஹோண்டா ஹார்னெட் 2.0 வரை..

இந்தியாவில் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் விற்பனையாகும் டாப் 5 மோட்டார் பைக்குகள்

இந்தியாவில் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் விற்பனையாகும் டாப் 5 மோட்டார் பைக்குகள்

புதிய தயாரிப்புகள் மோட்டார்பைக் பிரிவில் ஒரு கேம் சேஞ்சராகவே உள்ளது. அந்த வகையில் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய டாப்5 நிறுவனங்களின் மோட்டார் பைக்கின் மாடல்களை பற்றி காண்போம்.

  • Share this:
2020ம் ஆண்டு உண்மையில் நம்மில் நிறைய பேருக்கு கடினமான ஆண்டாக இருந்தது. ஆனால் ஆட்டோமொபைல் துறை ஆண்டு இறுதியில் சற்று நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சந்தையில் உள்ள ஒவ்வொரு தயாரிப்புகளையும் புதுப்பிக்கும் வகையில் BS-VI மாசு உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்தியன் மூலம் விஷயங்கள் சற்று பிரகாசமாக இருந்தன. மேலும் புதிய தயாரிப்புகள் மோட்டார்பைக் பிரிவில் ஒரு கேம் சேஞ்சராகவே உள்ளது. அந்த வகையில் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய டாப்5 நிறுவனங்களின் மோட்டார் பைக்கின் மாடல்களை பற்றி காண்போம்.

2020 Hero Xpulse 200

2020 Hero Xpulse 200


Xpulse இப்போது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சாகச மோட்டார் பைக்காக உள்ளது. எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி இதன் விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Xpulse பைக் 199.6-CC எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 17.8 பிஹெச்பி மற்றும் 16.4 என்எம் டார்க் திறனை வெளியிடுகிறது. இது 21 அங்குல முன் மற்றும் 18 அங்குல பின்புற சக்கரங்களுடன் வருகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரையில் முன்புறத்தில் 190 மிமீ டெலஸ்கோபிக் யூனிட்டும், பின்புறத்தில் 170 மிமீ 10-ஸ்டெப் அட்ஜெசபிள் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாகச நிகழ்வுகளை விரும்புவோருக்கு, ஹீரோ ரூ.37,000 மதிப்பிலான ராலி-கிட் ஒன்றை ஆப்ஷனலாக வழங்குகிறது. இது சிறந்த சஸ்பென்ஷன், சிறந்த இருக்கை, ஹேண்டில்-பார் ரைசர்ஸ் மற்றும் பல அம்சங்களை கொண்டிருக்கும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350


ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மோட்டார் சைக்கிள் தண்டர்பேர்டின் மறு பதிப்பாக வெளிவந்துள்ளது. ஆனால் எல்லாவற்றையும் புதியதாகக் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் பைக் 349-சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 20.2 பிஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. மீட்டியோர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவற்றின் வண்ணங்கள் மற்றும் வேறு சில பாகங்களால் வேறுபடுகின்றன. மீட்டியோர் மற்ற 350-சிசி வாகனங்களை போலல்லாமல், எல்இடி டிஆர்எல், யூ.எஸ்.பி சார்ஜிங், எல்.ஈ.டி டெயில் லைட், புளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றுடன் வரும் நவீன அம்சங்களின் அடிப்படையில் வாகனம் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் விலைகள் அடிப்படை ஃபயர்பால் வேரியண்டிற்கு ரூ.1.76 லட்சம் என தொடங்கி சூப்பர்நோவா வேரியண்டிற்கு ரூ.1.90 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்


பிரீமியம் 160-சிசி பைக் பிரிவில் ஹீரோவின் முதல் வெளிப்பாடு எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஆகும். ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் ஏர்கூல்டு 160சிசி பிஎஸ்-6 எஞ்சின் உள்ளது. இது 15 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை அதிகபட்சமாக வெளிப்படுத்துகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலில் முழுமையான டிஜிட்டல் நெகட்டிவ் எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் வாகனத்தின் வேகம், டாக்கோமீட்டர், ட்ரிம் மீட்டர், ஓடோமீட்டர், எரிவாயு கொள்திறன் அளவு குறித்த தகவல்களை பெற முடியும். இந்த பைக்கில் ஐ3எஸ் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், ஆட்டோ செயில் டெக்னாலஜி, சைடு ஸ்டான்டு எஞ்சின் கட்-ஆஃப் போன்ற கட்டமைப்புகள் உள்ளன. இந்த பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், அனால் டாக்கோமீட்டர் கவுண்டர் மற்றும் எல்.சிடி. டிஸ்பிளே போன்றவை உள்ளன. டிராஃபிக்கின் போது ரைடருக்கு பயன் தரும் விதத்திலான Glide Through Technology எனப்படும் GTT அம்சம் இந்த பைக்கில் உள்ளது. மோட்டார் பைக்கின் முன்-டிஸ்க் வேரியண்ட்டின் விலை ரூ.1.05 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி டூயல் டிஸ்க் வேரியண்டிற்கு ரூ.1.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.

ஹோண்டா ஹார்னெட் 2.0

ஹோண்டா ஹார்னெட் 2.0


இந்தியாவில் முதலில் 160சிசி பைக் மார்க்கெட்டில் ஹார்னெட் பைக் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்தது. BS-VI மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, அந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஹார்னெட் பைக் 200சிசி எஞ்சின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்சிடி திரையுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தங்க வண்ண முலாம் பூச்சுடன் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், முன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் 184 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 எச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் சங்கிரியா ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் ஆகிய 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ .1.28 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (2020 TVS Apache RTR 200 4V)

2020 TVS Apache RTR 200 4V


டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200வி பைக்கில் 197.75 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் எஞ்சின் துல்லியமான பவர் டெலிவரியை வழங்குவதால், நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த பைக் 127 கிமீ வரை வேகம் செல்லும் திறன் படைத்தது. 0 - 60 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.



இதன்மூலமாக, பைக் இயக்கம் உள்ளிட்டவை குறித்து ஏராளமான தகவல்களை பெற முடியும். இதில், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டபுள் பேரல் புகைப்போக்கி ஆகியவை உள்ளன. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஒய்பி மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த மோட்டார் பைக் எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ.1.25 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: