• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அப்பாச்சி முதல் பல்சர் வரை... ரூ.1.3 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெஸ்ட் 5 பைக்குகள்!

அப்பாச்சி முதல் பல்சர் வரை... ரூ.1.3 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெஸ்ட் 5 பைக்குகள்!

ரூ.1.3 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெஸ்ட் பைக்குகள்

ரூ.1.3 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெஸ்ட் பைக்குகள்

சாலையில் ரைடிங் செல்ல விரும்புபவர்களுக்கு Hero Xpulse 200, சரியான தேர்வாக இருக்கும். தினசரி பயணம், வார இறுதி சுற்றுலா, நீண்ட தூர பயணங்களுக்கு இந்த பைக் உதவும்.

  • Share this:
கோவிட் வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் பொதுப்போக்குவரத்தை தவிர்த்து பாதுகாப்பான தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர். பட்ஜெட் விலையில் வாகனங்கள் வாங்க விரும்புபவர்கள் கார்களுக்குப் பதிலாக இருசக்கர வாகனங்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். கார்களின் விலை அதிகமாகவும், இருசக்கர வாகனங்களின் விலை மலிவாகவும் இருப்பதால், இருச்சக்கர வாகனங்களை வாங்குவதற்கு முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த பைக்குகளை தேர்ந்தெடுப்பது? என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நீண்ட தூரம் பயணம், சவாரி செய்வதில் மகிழ்ச்சியை விரும்புபவராக இருந்தால், அதற்கேற்ற பைக்குகள் வாங்க வேண்டும். அதிக செயல்திறன் கொண்ட, வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய பைக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. பட்ஜெட் விலையில் இருப்பவர்களுக்கு அந்த பைக்குகள் சரியாக இருக்கும். அதில் கொஞ்சம் காஸ்ட்லி மற்றும் ராயல் லுக், நீண்ட தூரம் செல்பவர்களாக இருந்தால், ரூ.1.3 லட்சத்துக்கும் கீழ் இருக்கக்கூடிய பைக்குகள் சரியாக இருக்கும். இந்த விலையில் இருக்கும் பெஸ்ட் 5 மாடல்களை பார்க்கலாம்.,

1. Hero Xpulse 200 மற்றும் Xpulse 200 4V

சாலையில் ரைடிங் செல்ல விரும்புபவர்களுக்கு Hero Xpulse 200, சரியான தேர்வாக இருக்கும். தினசரி பயணம், வார இறுதி சுற்றுலா, நீண்ட தூர பயணங்களுக்கு இந்த பைக் உதவும். Xpulse 200 பைக்கானது 8 bhp மற்றும் 16 Nm ஆற்றலை வழங்கக்கூடியது. 199.6 cc ஆயில்-கூல்டு எஞ்சினுடன் வருகிறது. இது உங்களுக்கு போதுமான ஆற்றலைக் கொண்ட பைக்காக இல்லை என்றால், நீங்கள் Xpulse 200 4V -க்கு செல்லலாம். இது 19 bhp மற்றும் 17 Nm டாப் திறனை வெளிபடுத்தக்கூடியது. எக்ஸ்பல்ஸ் 200, அதன் எல்சிடி கிளஸ்டர் மற்றும் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தலுக்கான புளூடூத் வசதிகள் உள்ளது. புதிய பாதையில் செல்பவர்களுக்கு இது நிச்சயம் உதவும்.

Hero Xpulse 200 விலை: ₹1.23 லட்சம் முதல் ₹1.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

2. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S)

லுக்கில் கவர்ச்சியாக இருக்கும் பைக்காக இது இருக்காது. ஆனால், 199.6 cc ஆயில்-கூல்டு எஞ்சினில் வெளிவருகிறது. இது Xpule 200 -பைக்கைப் போன்றே 16 Nm, 18 bhp - ஐ வெளியிடுகிறது. Xtreme 200S பைக்கிலும் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தலுக்கான புளூடூத் ஆதரவுடன் LCD கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. இவைதவிர, பைக்கில் ஆட்டோ-செயில் தொழில்நுட்பம் உள்ளது. இந்த ஆப்சன் டிராஃபிக்கில் சரியாக செல்வதற்கு உதவியாக இருக்கும்.

Hero Xtreme 200S விலை: ₹1.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

3. TVS அப்பாச்சி RTR 180

இளைஞர்களின் பிரியமான பைக்குகளில் ஒன்றான TVS Apache RTR 180, புதுமையான அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது. இதில் செமி இன்ஸ்ட்ரூமென்டல் பேனல், ஜீரோ முதல் 60 கி.மீ/மணி செல்லக்கூடிய டைமர் இருக்கும். இதில் உள்ள க்ளைடு த்ரூ தொழில்நுட்பம், மிக குறைவான வேகத்தில் செல்லவும், டிராஃபிக்கில் நிறுத்துவதற்குமான அம்சங்களைக் கொண்டது. Apache RTR 180 - 177.4 cc என்ஜின் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இருக்கும் 17 bhp மற்றும் 15.5 Nm வெளிப்படுத்தும்.

TVS அப்பாச்சி RTR 180 விலை: ₹1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

4. TVS அப்பாச்சி RTR 160 4V

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பைக் லிஸ்டில் அதிக வசதிகளைக் கொண்டது Apache RTR 160 4V. ஸ்மார்ட்போன் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தலுக்கான SmartXconnect அமைப்புடன் கூடிய LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. ரைடிங்கில் அசத்தலான அனுபவத்தைக் கொடுக்கும் இந்த பைக், டிராபிக் உள்ளிட்ட சில இடங்களில் மெதுவாக செல்வதற்கு உதவும் க்ளைடு-த்ரூ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. அண்மையில் வெளியான Apache RTR 160 4V பைக்கில் மூன்று ரைடிங் ஆப்சன்கள் உள்ளன. இந்த மோட்டார் சைக்கிளில் 159.7 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் இடம்பெற்றிருக்கும். இவை 17 பி.எச்பி மற்றும் 15 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும்.

Also read... தார் கார் முழுவதும் அமிதாப் டையலாக் - நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!

TVS அப்பாச்சி RTR 160 4V விலை: ₹1.15 லட்சம் முதல் ₹1.21 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்)

5. பஜாஜ் பல்சர் NS160

பஜாஜ் பல்சர் 160 பைக், 160 சிசி பவர் பிளாண்ட்டுடன் வருகிறது,. இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து 15 என்எம் உடன் 17 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகிறது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைக் கொண்டுள்ளது. இதில் வேகம், ஓடோமீட்டர், சைட்-ஸ்டாண்ட் இண்டிகேட்டர், கடிகாரம் போன்ற தகவல்களும், அனலாக் டேகோமீட்டர் மற்றும் எல்சிடி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

பஜாஜ் பல்சர் NS160 விலை: ₹1.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: