• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 3.5 லட்ச ரூபாய்க்குள் இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள்...!

3.5 லட்ச ரூபாய்க்குள் இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள்...!

இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள்

இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள்

உங்களால் 2.5 லட்ச ரூபாய் முதல் 3.5 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய முடிந்தால், இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள் ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

  • Share this:
கடந்த சில வருடங்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய அளவில் வளர்ந்துள்ளது. மக்களும் புதிய நவீனமான, ஸ்டைலான வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டிக்கொண்டு புதிய மாடல்களில் பைக்குகளையும் கார்களையும் உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றில், பல லட்சம் மதிப்புள்ள உயர் ரக அதிநவீன பைக்குகளை சிலர் மட்டுமே வாங்கினாலும், நடுத்தர விலையில் எக்கச்சக்கமான பிரீமியம் பைக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. உங்களால் 2.5 லட்ச ரூபாய் முதல் 3.5 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய முடிந்தால், இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள் ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இந்தியாவின் டாப் 5 பிரீமியம் பைக்குகள் இங்கே.

KTM 390 அட்வென்ச்சர்

இளைஞர்களின் கனவு பைக்குகளில் KTM பைக்குகளும் தனிப்பட்ட இடம் உண்டு. 500 சிசி என்ஜின் கொண்ட இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸூடன், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் க்ளட்ச் இல்லாத கியர் ஷிபிட்ட்டுகளுக்காக இரண்டு டைரக்ஷனில் குயிக்-ஷிப்ட் உடன் வருகிறது. பி.எஸ் விஐ கம்ப்ளைன்ட் கொண்ட 390 அட்வென்சரில் சிங்கிள் சிலிண்டர் உள்ளது. 373.2 சிசி லிக்விட் கூல்டு என்ஜினாக இருப்பதால் 43 பிஹெச்பி பவர் மற்றும் 37 என்.எம் டார்க்கும் கிடைக்கும். அதிவேக பைக் ஓட்டுபவர்களின் எதிர்பார்ப்பை இந்த பைக் பூர்த்தி செய்யும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 3.28 லட்சம்.

கவாசாகி நின்ஜா 300

296cc திறன் கொண்ட கவாஸ்கி நின்ஜா 300 (kawasaki Ninja 300) பைக்கின் ஆரம்ப விலை 2.98 லட்சம் ரூபாய். மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பைக்குகள் பட்டியலில் ஏற்கனவே நின்ஜா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 296 சிசி பைக் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்பட்ட பைக்கில் லிக்விட்-கோல்டு என்ஜின், பேரலல்-டிவின் ஆகிய அம்சங்களுடன் 10,000 ஆர்பிஎம் 27 என்எம் டார்க் மற்றும் 11,000 ஆர்பிஎம் 38.4 பிஎச்பி பவரையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கின் ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

பிஎம்டபிள்யூ G 310 GS

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகமாக எதிர்பார்ப்பை உருவாக்கிய பைக் இது தான். ஸ்போர்ட்டி தோற்றம், மூன்று நிறங்களில் வரும் பிஎம்டபிள்யூ G 310 GS, 313 சிசி லிக்விட் கோல்டு என்ஜின் கொண்டுள்ளது. ரைடு-பை-வையர் திராட்டில், ப்ளூடூத் டிஸ்ப்ளே, 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச், ஆகிய அம்சங்களுடன், 28 என்எம் டார்க் மற்றும் 34 பிஹெச்பி பவர், செயல்திறன் கொண்டது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக 3 லட்ச ரூபாய்.

Also read... விரைவில் ஜப்பானில் அறிமுகமாக உள்ள சுசுகி ஆல்டோவின் விவரங்கள் ஆன்லைனில் லீக்!

ராயல் என்ஃபீல்டு 650 டிவின்ஸ்

எவ்வளவு புதிய ரக பைக்குகள் வந்தாலும், ராயல் என்ஃபீல்டு பைக்குகள் எவர்கிரீன் பிராண்டாக ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். 650 டிவின்ஸ் என்ற அழைக்கப்படும் இண்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 இவற்றின் ரெட்ரோ ஸ்டைல் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் பைக் பிரியர்களைக் கவர்ந்துள்ளது.

ராயல் இண்டர்செப்டார் ஒரு ரோட்ஸ்டர் எனவும், கான்டினென்டினல் ஜிடி ஒரு கேஃப் ரேசராகவும் அழைக்கப்படுகிறது. டிவின் காயில்-ஓவர் ஷாக்ஸ் கொண்ட டெலஸ்கோப்பிக் ஃபோரக்ஸ், 47 பிஹெச்பி, 52 என் எம் டார்க் செயல்திறன் உடன், 648 சிசி ஏர்-ஆயில் கூல்டு பேரலல் டிவின்-சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இண்டர்செப்டார் விலை 2.9 லட்ச ரூபாய் மற்றும் கான்டினென்டினல் விலை 3 லட்ச ரூபாய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: